Wednesday, 17 April 2013

காலை வந்தபோது

விஷ நாகம் ஒன்று
என்மீதேறி இழைகையில்
நிலத்தில் கசிந்திருந்தது
கதிரவனின் ஒரு துளி

யாரோ துர்மரணமடைந்திருந்தார்கள்
நான் வழிதவறி நுழைந்த
வீட்டின் ஒரு பகலில்
ஒரு பைத்தியக்காரன்
தாளிட்டிருந்த என் நினைவு கலைத்துத்
திடுக்கிடச் செய்கையில்
மிச்சமிருந்தது

அன்றைய விடியலின்
இறுதிக் கதிர்
இரவின் அகாலத்தினைத்
தன் பாட்டுக்குக் கடக்கும்
குடுகுடுப்பைக்காரனின் குரல் மட்டும்
மனதில் நிறைக்கிறது
அமானுஷ்யத்தை
இருளின் துணையோடு

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home