Wednesday, 17 April 2013

எனது சித்திரம்

சிறிது குழப்பமிருப்பினும்
சிரமமின்றித் திடமாய் வரைகிறேன்
எனது படத்தை
கண்ணாடியில் பிரதிபலிப்பதைக் காட்டிலும்
துல்லியம் மிக்கதாய்ச்
சில கோடுகளின் வழியே
உயிர்ப்பிக்கிறேன் அதனை
அதனுடன் கைகோத்துக்கொள்ள
உரையாட நீ விரும்பலாம்
தவறில்லை
அதன்மீது உனக்குப் பிடித்தமான
உனக்கு
இசைவான
வர்ணங்களை நீ தீட்டக்கூடும்
அல்லது சில கிறுக்கல்களையேனும்
உருவாக்கி அதிலுள்ள மௌனத்தை
நீ உடைக்கலாம்
இருந்தும்
அதற்கும் மேலே
அச்சித்திரம் வரையப்பட்டிருக்கிறது
சில அழுத்தமான கோடுகளால்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home