Wednesday, 17 April 2013

எஞ்சியவையோடு இருந்துகொண்டிருக்கிறேன்

இன்றும் வருகிறது
இரவு
எதிர்கொள்ளச்
சில முகங்களை வேண்டி
இவ்வேளைக்குள்
புதைந்துகொண்டிருக்கிறேன்

பெருகும் கடலெனக்
கடந்துகொண்டிருக்கின்றன
உறவுகள்
ஒரு பறவையென
எங்கிருந்தோ தன் பிரியத்தில் மிதந்தபடி வந்திருக்கும்
சினேகிதியின் கைகள் பற்ற
எத்தனிக்கும் தொலைவு கூடிய
என் ஸ்பரிசங்கள்
இம்முறையும்
அவளைப் போய்ச் சேரவில்லை

எவர்மீதும் குறுக்கிடாத
ஏனைய காரியங்களுடன்
பதுங்கிக்கொண்டிருக்கிறேன்
எப்போதோ
கவனமின்றித் தவறிய
காரியங்களுக்கான
பாவமன்னிப்புகள்
எனக்கு இன்னும்கூட
இருந்துகொண்டிருக்கின்றன

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home