Wednesday, 17 April 2013

தனித்தொரு பொழுது

அவமதிப்பின் விஷம் தீண்டிய
பிறிதொரு தருணத்தில்
மொட்டை மாடியில் துணையிருக்கிறது
நிலவு

தூரத்துவீடும் விளக்கணைத்துத்
தன்னை விடுவிக்கிறது
இன்றைய விழிப்பின் தவிப்புகளிலிருந்து
உறங்கிவிட்ட
தொட்டிச் செடிகளோடு அமர்ந்திருக்கிறேன்
அதன் தூங்காத ஒரு தளிரை வேண்டி
கைப்பிடிச் சுவரில்
விழிதீட்டும் ஆந்தை
தன்குரல் மட்டும் காட்டி
என்னைத் தவிர்க்க முயல்கிறது
வேறெதையெதையோ நினைவுறுத்தியபடி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home