Wednesday, 17 April 2013

தனிமொழி

மழை கிட்டாத் தவிப்பிலிருந்தே எழும்
அதன் அசௌகர்யங்கள் குறித்த
என் கண்டனங்கள்
மின்விசிறியின் அணைப்பிலிருந்தபடியே
இப்பருவத்தில் என்மீது திரளும் வெயிலையும்
மறுபடி மறுபடி நினைவுக்குள் நுழைத்துக்கொள்வேன்

போர்வை வேய்ந்த உடலோடு
பின்னிரவின் கடும்பனி ஏற்படுத்திய
உதட்டு வெடிப்பின் ரணங்களை
நாவினால் நீவியபடி தகாத வார்த்தைகளை விடுவிப்பேன்
வெகு அமர்த்தலாக ஓடிமறைகிற
காலத்தின் பக்கங்கள் கிழிபடும் உடலெங்கும்
இந்தச் சங்கடங்களுக்குப் பதில்சொல்ல முயல்கிற.
எவரிடமும் நான் சொல்ல
ஒரு செய்தி இருப்பதில்லை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home