தாம்பத்தியம்
தென்றல் அறியும்
எனது மென்மை
என்னைச் சிதைத்து அழிக்கும்
வாழ்க்கை அறியும்
எனது உறுதி
நான் அணைத்து வளர்க்கும்
குழந்தை அறியும்
எனது நேசம்
என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை
பனிபடர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்
எனது கவிதைகள் அறியும்
எனது பூகம்பங்கள் அறியும்
என்னை
எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த
எதையுமே
எல்லா இடத்திலும்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
கண்ணாடியில்
சிரிக்கும் பொழுதும் கூட
பேசாதே
வாழ்க்கையின் துயரம் பற்றி
பேசு
வாழுதலின் துயரம்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home