இன்னொரு வாசல்
கர்பவாய் தொடங்கி
எல்லாக் கதவுகளும் மூடித்தானிருந்தன
தட்டினால் திறக்குமென்கிற
நம்பிக்கைகள் திறந்தன
சிலதை என்றாலும்
துளிப்பிசகில் மூடிவிடக் காத்திருக்கின்றன
எல்லாக் கதவுகளும்
ஒன்றை மூடினாலும்
இன்னொன்று திறக்குமென்கிற
ஒரு நம்பிக்கை நிபந்தனையாகும்பொழுது
நான் தயாராயில்லை அதன் கீழ்வர
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home