Wednesday, 17 April 2013

அந்தரம்

திரவம் தளும்பி வழியும்
கண்ணாடிக் குவளை
மிருதுவான டிஷ்யூ பேப்பர் அல்லது
மெல்லிய படுக்கை விரிப்பு
இவற்றின்
ஒத்த சாயலோடிருக்கிறாய்

எளிதில்
எதன் பொருட்டும்
உடைந்துவிடவும்
கசங்கிப்போகவும் தோதாய்
உதாரணமாக
இன்று நான் உனக்குத் தர மறந்த
ஒரு கோப்பைத் தேநீர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home