Wednesday, 17 April 2013

கண்ணாடிக் கோப்பையில்

கண்ணாடிக் கோப்பையில்
என் பருவங்களின் சாறை நிரப்பித்
தழும்பாது காத்திருந்தீர்கள்
களிப்போடு சிலகாலம்
சலிப்போடு சிலகாலம்
அடைகாத்துச் சோர்கிற நொடியில்
திறந்துகொள்கிறது
கடலாழச் சாடியொன்றின் மூடி
பருவத்தின் பூதம்
களிப்போடு வெளியேறவென

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home