Wednesday, 17 April 2013

ஒரு சித்திரத்தை நோக்கி

இருள்மிதக்கும் நெடுஞ்சாலையில்
பாய்ந்தோடும் என் வாகனத்தின்
ஒளி தோங்கி விலகுகிற
சதைத் துணுக்குகளின் மீது
நான் வரைய முயலும்
வேறொரு சித்திரத்தையோ
வனைய விரும்புகிற
ஏதேனும் ஓர் உருவத்தையோ
அனுமதிப்பதேயில்லை
என் பயணங்களில் எதிர்ப்பட்டு
சாலையைக் கடந்துகொண்டேயிருக்கும்
ஒரு மனநோயாளி
அவனது கனவுகளை அடைக்காத்தபடி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home