பயணம்
கவிந்துகொண்டிருக்கிற
பயிரின் மணத்துடன்
தன் கழிவின் நாற்றத்தைப் பரப்பும்
தூரத்துத் தொழிற்சாலை
என் விருப்பங்களை
கனவுகளை
உடலின் வனப்புகளை
காலம் கொத்தித் தின்னுவதே போல
சாலையில் பரப்பிய தானியங்களை
சாவகாசம் கொள்ள வழியற்ற பறவைகள்
மிதந்து மிதந்து கொத்தும்
மாறி மாறித் தொடர்கிற காட்சிகளோடு
இணைந்து கெள்கிறது
இப்பயணம்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home