இடம்
எனக்குத் தெரியும்
காலுடைந்த நாற்காலியின் வருத்தங்களை
திரைகளணியாச் சன்னல்களை
கடிகாரத்தின் மீது படர்ந்துவிட்ட ஒட்டடைகளை
புணர்ந்து பெருகும் நடுநிசிக் கரப்பான்களை
தாழ்ப்பாளில்லாக் குளியலறையில்
தொலையும் அந்தரங்கங்களை
எனக்குத் தெரியும்
எனதிந்தக் காரியங்களையும்
ஓயாத பறத்தல்களுடன்
குழந்தைகள் மீளுமுன்
முடிக்க வேண்டுமென்பதும்
இருந்தும்
இன்னும்கூட நிகழவில்லை
இது எனது இடமென்கிற பிடிமானமும்
ஆதிகாலக் குகைவெளியிலிருந்தென்
வெளியேற்றமும்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home