ஒளிந்திருக்கட்டும்
உன்னிடம் சொல்ல முடியாத செய்திகள்
சுவாசத்தைக் கடினமாக்குகின்றன
பகிர்ந்து கொள்ள இயலாதசெய்திகள்
வந்து சேராமலேயே இருக்கலாம்
பெரும்பாலான மௌனங்களுக்கு
எத்தனையோ அர்த்தங்கள் இருக்கலாம்
அவற்றிலிருந்து எப்போதும் நான் பெற்றுக்கொள்வது
ஒரே ஒரு அர்த்தம்தான்.
சொல்ல முடியாமல் போன செய்திகளைப் பற்றிய
பகிர்தல்கள் உருவாக்குவது
பகிர்தலின் ஆசுவாசத்தை அல்ல
அதன் வெற்றிடத்தை
என்னை எப்போதும் சுற்றிச் சுழலும்
செய்தியின் கனவை
அதன் வண்ணங்களை
நான் இழக்காதிருக்க
அச்செய்தி எனக்குள்ளேயே
ஒளிந்திருக்கட்டும்
உன் வருத்தங்களோடு
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home