Wednesday, 17 April 2013

மரண வீட்டில்

மரண வீட்டில்
அனாவசிய வஸ்துவாகி விடுகிறது
மௌனம்

இறந்துவிட்ட தன்தாயின் சாயலைப்
பலருக்கும் நினைவிலேறச் செய்தபடி
காற்றைப் போலச் சுற்றிச் சுழன்றோடுகிறாள் குழந்தை

என் ஞாபகங்களைக் கீறிக்கீறி
மேலெழுகிறது
இறந்தவளின் சித்திரம்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home