Thursday, 11 April 2013

மூவர்ண கலரில் வீடுகளை அலங்கரியுங்கள்!

Tricoloured Home Independence Day ந்திய திருநாட்டின் சுதந்திரதினம் என்பது சிறப்பு வாய்ந்த நாள். இந்த தினத்தை பெருமையுடன் கொண்டாடும் வேளையில் நம் வீட்டினையும் மூவர்ண கலரின் அலங்கரித்து தேசபக்தியை வெளிப்படுத்துவோம். சுதந்திரதினத்தன்று எந்த மாதிரியான அலங்காரங்களைச் செய்தால் இல்லம் அழகாகும் என்று உள் அலங்கார நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் படியுங்களேன். 
 
 
பச்சை நிறம்
 
 தேசிய கொடியில் உள்ள பச்சை நிறம் நாட்டின் வளமையை குறிக்கும். அதனை உணர்த்தும் வகையில் ஹாலில் பச்சை நிற கார்பெட் விரிக்கலாம். ஆங்காங்கே பச்சை நிற தாவரங்களைக் கொண்ட தொட்டிகளை அலங்காரமாக வைக்கலாம். 
 
வெள்ளை நிறம் 
 
 தேசிய கொடியில் உள்ள நிறங்கள் வெண்மை நிறம் அமைதியை உணர்த்தும் வகையில் உள்ளது. எனவே வீட்டிற்குள் நுழைந்தாலே அமைதி தவழ சுவர்களுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். 
 
ஆரஞ்சு வர்ண நிறம் 
 
தேசிய கொடியில் முதலில் உள்ள நிறமான ஆரஞ்சு வர்ண நிறம் தியாக உணர்வை குறிக்கிறது. இந்த நிறத்தை உடைய சோபா செட்டினை ஹாலில் போடலாம். அந்த நிறம் மனதிற்கு இதத்தை கொடுக்கும். புதிதாக ஷோபா வாங்கி செலவழிக்க முடியாதவர்கள் ஆரஞ்சு வர்ண ஷோபா கவர் வாங்கி புதிதாக அலங்கரிக்கலாம். 
 
டேபிள் மேட், மிதியடி, திரைச்சீலைகள் போன்றவைகளையும் மூவர்ண நிறங்களில் மாற்றிவிடலாம். இதனால் வீட்டின் செட் அப் புதிதாக மாறிவிடும். 
 
டேபிள் மேட் பச்சை நிறத்திலும், திரைச்சீலைகளை ஆரஞ்சு வர்ணத்திலும் மாற்றலாம். வெள்ளை நிற சுவரில் தேசியக் கொடியை அலங்காரமாய் பொருத்தலாம். சுதந்திர தினத்தன்று செய்யப்படும் இதுபோன்ற அலங்காரங்கள் மனதிற்கு இதம் தருவதோடு நம் தேசபக்தியையும் பறைசாற்றும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home