Tuesday, 9 April 2013

ருசியான உப்புக்கண்டம்

Dried Meat Fry Uppukkandam ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். உப்புக்கண்டம் எளிதாக செய்யலாம். 
 
தேவையான பொருட்கள்
 
ஆட்டு இறைச்சி – 1 கிலோ, 
இஞ்சி - 1 அங்குல துண்டு, 
பூண்டு – 20 பல், 
 காய்ந்த மிளகாய் – 15 , 
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு. 
 
உப்புக்கண்டம் செய்முறை 
 
ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். 
 
மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காயவைக்கவும். ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்கள் வரை காயவைக்கவும். 
 
நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. 
 
தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான உப்புக்கண்டம் ரெடி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home