Tuesday, 9 April 2013

இறால் உருளைக்கிழங்கு கிரேவி

Prawn Potato Curry
கடல் உணவுகளிலே இறாலின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறாலுடன் உருளைக்கிழங்கு, மாங்காய் சேர்த்து சமைத்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும். இறால் உருளைக்கிழங்கு கிரேவி ஈசியா செய்யலாம். 
 
தேவையான பொருட்கள் 
 
 இறால் - 1/2 கிலோ 
உருளைக்கிழங்கு - 2 
வெங்காயம் - 2 
தக்காளி - 2 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 
டேபிள்ஸ்பூன் சோம்பு தூள் - 1 டீஸ்பூன் 
சீரகத் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 11/2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை , மல்லிதழை - சிறிதளவு தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் 
பட்டை, கிராம்பு - சிறிதளவு 
எண்ணெய் - தாளிக்க 
 
தேவையான அளவு 
 
இறால் கிரேவி செய்முறை முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதனுடன் மிளகாய் தூள், சீராகத் தூள், சோம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரமாவது ஊறவைக்கவேண்டும். 
 
  உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் நீக்கி நறுக்கி வைக்கவேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும் . 
 
துருவிய தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பின்பு கறிவேப்பிலை, சோம்பு, பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதுநேரம் வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். 
 
இதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி நன்றாக வேகவிடவும். நறுகிய உருளைக்கிழங்கை இந்த கலவையில் போட்டு வதக்கி லேசாக உப்பு சேர்க்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும். 
 
 10 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைபோட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து மூடிவிடவும். 
 
சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும். மல்லிதழையை தூவி சிறிது நேரம் மூடிவைக்கவும். சுவையான இறால் உருளைக்கிழங்கு கிரேவி தயார். சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு இந்த இறால் உருளைக்கிழங்கு கிரேவி சூப்பராக இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home