Thursday, 11 April 2013

குட்டீஸ் அறைகளில் டெடி பொம்மை அலங்காரம்!

Teddy Bears Home Decor Simple Ideas சின்னக் குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பிள்ளைகள் வரை இன்றைக்கு டெடி பொம்மைகளின் ரசிகர்களாய் இருக்கின்றனர். புசு புசு வென்று குண்டாக இருக்கும் அந்த பொம்கைள் நம் படுக்கை அறையில் இருப்பதே ஒரு அழகுதான். அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் அந்த பொம்மைகளை நம் அறையில் எவ்வாறு அலங்கரிக்கலாம் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். குட்டீஸ்களுக்கு பிடித்தமான டெடி பொம்மையை அவர்களின் அறைகளில் ஷோ கேஸ்களில் வைக்கலாம்.
 
அவர்கள் படிக்கும் டேபிள், கம்யூட்டர் டேபிள் மேல் வைத்து அழகு படுத்தலாம். சீலிங்கில் இருந்து கம்பி கட்டி அதில் டெடி பொம்மையை தொங்க விடலாம். 
 
அவை ஜாலியாக ஆடிக்கொண்டிருக்கும். டீன் ஏஜ் குழந்தைகள் என்றால் அவர்களின் டிரஸ்சிங் டேபிளில் வைத்து அலங்கரிக்கலாம். கண்ணாடி போட்ட ஷோ கேஸ் இருந்தால் அதில் வைத்து பொம்மையில் அழகை அழுக்குப் படாமல் ரசிக்கலாம். 
 
சோபா செட் இருந்தால் அதற்கு முன்னால் இருக்கும் டீ பாய் மேல் டெடி பொம்மையை வைக்கலாம். மென்மையான அந்த பொம்மை அறையின் அழகை கூடுதலாக்கி காட்டும். 
 
ஒரு சிலர் பாத்ரூமில் கூட டெடி பொம்மைகள் வேண்டும் என்பார்கள். எனவே பொம்மையை பாலிதீன் கவரில் போட்டு லேமினேட் செய்து தண்ணீர் படாத உயரத்தில் வைக்கலாம். இது மனதிற்கு உற்சாகம் தரும். 
 
டைனிங் டேபிளில் பூக்கள், பழங்கள் வைக்கும் இடத்தில் நடுநாயகமாக டெடி பொம்மையை வைக்கலாம். உணவருந்தும் போது இன்னும் கொஞ்சம் சாப்பாடு வேண்டும் என்று குழந்தைகள் கேட்பார்கள். 
 
என்ன உடனே எங்க கிளம்பிட்டீங்க? டெடி பொம்மை வாங்கவா?

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home