Saturday, 20 April 2013

தேங்காய் கப் கேக்


 தேவையான பொருட்கள்;

மைதா மாவு -  150 கிராம்
பேக்கிங் பவுடர் - முக்கால்  டீஸ்பூன்
மார்ஜரின் அல்லது வெண்ணெய்  அல்லது எண்ணெய்- 100 கிராம்
சர்க்கரை  - 150 கிராம்
பெரிய முட்டை - 1
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - முக்கால்  கப்
பால் - கால் - அரை கப்
வினிகர் - 1 டீஸ்பூன்
உப்பு - பின்ச்.
அலங்கரிக்க விரும்பினால் செரி உபயோகிக்கலாம்.

செய்முறை:

வெண்ணெயை அல்லது மார்ஜரினை லேசாக சூடேற்றவும்.பவுலில் விடவும். அத்துடன்  சர்க்கரை சேர்க்கவும்.நன்கு அடித்துக் கொள்ளவும்.முட்டை சேர்க்கவும்,கலந்து விடவும்,வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

நன்கு கலந்து விடவும், அத்துடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர்  சேர்த்து சலித்த மாவை சேர்க்கவும். நன்கு அப்படியே பிரட்டி விடவும், தேங்காய் துருவல், வினிகர் சேர்க்கவும்.

தேங்காய் சேர்ப்பதால் கெடாமல் இருப்பதற்கு வினிகர் சேர்க்கிறோம்.கலந்து கொள்ளவும்,கெட்டியாக இருக்கும்.

அள்ளி வைப்பதற்கு வசதியாக கால் கப் பால் சேர்க்கவும்.பின்ச் உப்பு சேர்க்கவும்.தேவைப்பட்டால் சிறிது பால் கொஞ்சம் கூட சேர்க்கலாம்.இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

ரொம்ப சிரமப்படாமல் அப்படியே ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்தாலே சூப்பராக வரும்.மாவையே சாப்பிடலாம் போல அப்படியொரு ருசியாக இருக்கும்.

 இப்பொழுது கேக்கிற்கான மாவு ரெடி.

 கப் கேக் ட்ரேயில்,மாவை அகப்பையால் எடுத்து  அரை கப் அளவிற்கு விடவும் அப்படியே அத்தனை கப்பையும் நிரப்பவும்.ஊற்றிய மாவின் மேல் பாதியாக கட் செய்த செர்ரி வைத்து அலங்கரிக்கலாம்.

தேங்காய் துருவல் சேர்ப்பதால் மிகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.200 டிகிரிக்கு ஓவனை முற்சூடு செய்யவும்.கேக் மாவு ஊற்றிய ட்ரேயை  ஓவனில் வைக்கவும்.

 30-45 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிடும். டூத் பிக் வைத்து குத்தி பார்க்கவும்.மாவு உள்ளிருந்தால் சிறிது நேரம் வைத்து எடுக்கவும்.

இந்த கேக் வெளியே கிரிஸ்பாக மொறு மொறுவென்றும்,உள்ளே சாஃப்டாகவும் வரும்.ரெடியான ட்ரேயை வெளியே எடுத்து ஆறியவுடன் கேக்கை எடுக்கவும்.மூடிய டப்பாகளில் போட்டு வைக்கலாம்.ட்ரேயின் அளவைப் பொருத்து கேக் எண்ணிக்கை அமையும்.

 சுவையான தேங்காய் கப் கேக் ரெடி. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்,

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home