மஹா கவி பாரதியார் பாடல்கள் - தேசீய கீதங்கள் - பாரத நாடு 4
தேசீய கீதங்கள்1. பாரத நாடு4. பாரத நாடு | ||
| ராகம்-ஹிந்துஸ்தானி தோடி பல்லவி | ||
| பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு | ||
| சரணங்கள் | ||
| 1. | ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு-இந்தப் | (பாருக்குள்ளே) |
| 2. | தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு- இந்தப் | (பாருக்குள்ளே) |
| 3. | நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப் பன்மை யிலேமறத் தன்மையிலே பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு-இந்தப் | (பாருக்குள்ளே) |
| 4. | ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினி லேஉயர் நாடு-இந்தக் | (பாருக்குள்ளே) |
| 5. | வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத் தண்மையி லேமதி நுண்மையிலே உண்மையி லேதவ றாத புலவர் உணர்வின லேஉயர் நாடு-இந்தப் | (பாருக்குள்ளே) |
| 6. | யாகத்தி லேதவ வேகத்திலே-தனி யோகத்தி லேபல போகத்திலே ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம் அருளினி லேஉயர் நாடு-இந்தப் | (பாருக்குள்ளே) |
| 7. | ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் | (பாருக்குள்ளே) |
| 8. | தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே தேட்டத்தி லேஅடங் காத நிதியின் சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் | (பாருக்குள்ளே) |
Labels: பாரதியார் கவிதைகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home