மங்களுர் ரசம்

தேவையான பொருள்கள்:
- பயத்தம் பருப்பு = 2 கரண்டி
- இஞ்சி = காலங்குலம்
- பச்சை மிளகாய் = 2
- தக்காளி = 2
- மிளகு = 1 ஸ்பூன்
- சீரகம் = 1 ஸ்பூன்
- தனியா = 1 ஸ்பூன்
- புளி = அரை எலுமிச்சை அளவு
- பெருங்காயம் = சிறிதளவு
- கடுகு = 1 ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
- பயத்தம் பருப்பை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். தக்காளி நறுக்கவும்.
- மிளகு, சீரகம் உடைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டவும். தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
- எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து தக்காளி வதக்கிக் கொண்டு புளித் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகு, சீரகம் சேர்க்கவும்.
- கொதிக்கத் துவங்கும் போது ஊறிய பயத்தம் பருப்பு வறுத்த தனியா, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.
மருத்துவ குணங்கள்:
- பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
Labels: ரசம் / சூப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home