Tuesday, 5 February 2013

நண்டு மிளகு சூப்

நண்டு மிளகு சூப்
தேவையான பொருள்கள்:
  1. பெரிய நண்டு = 1
  2. தக்காளி = 1
  3. சின்ன வெங்காயம் = 6
  4. மிளகுத்தூள் = 3 ஸ்பூன்
  5. இஞ்சி = 1 துண்டு
  6. சீரகத்தூள் = 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  8. பிரியாணி இலை = 1
  9. எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
  10. கிராம்பு = 1
  11. கறிவேப்பிலை = சிறிதளவு
  12. எண்ணெய் = தேவையான அளவு
  13. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்து கொள்ளவும். இஞ்சியை விழுதாக அரைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து அதனுடன் சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இஞ்சி விழுது, கலந்து வைத்த‌ மிளகு, சீரகத்தூள் அனைத்தையும் சுத்தம் செய்த நண்டு மீது தடவி தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கி வைத்த தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  • பிறகு மசாலா தடவிய நண்டை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறு கலந்து சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான நண்டு மிளகு சூப் தயார். இதை சூடாக பரிமாறினால் மிகவும் சுவையுட‌ன் இருக்கும்
.
மருத்துவ குணங்கள்:
  • நண்டில் வைட்டமின் C, வைட்டமின் B12 காணப்படுகிறது. இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், செலினியம் நிறைந்துள்ளது. அதிக அளவில் புரோட்டீன் நிறைந்த உணவு ஆகும்.
  • இந்த சூப் காய்ச்சலை குறைக்கும். ஜலதோஷம் ஏற்படும் நேரத்தில் இதை வைத்து சூடாக குடித்தால் ஜலதோஷம் இல்லாமல் போகும். நெஞ்சு சளியை நீக்க வல்லது. மேலும் இது உடலுக்கு அதிக சூடு என்பதால் சரியான அளவில் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home