பப்பாளிப்பழ ஜாம்
தேவையான பொருள்கள்
பப்பாளிப் பழக்கூழ் -1கிலோ
சர்க்கரை -750 கிராம்
சிட்ரிக் அமிலம் -3 கிராம்
பொட்டாசியம் மெட்டாபை சல்பைடு -1கிராம்
செய்முறை
நன்றாக பழுத்த பப்பாளிப் பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். பழங்களைக் கழுவியபின் ,தோலைச் சீவி இரண்டு துண்டங்களாக வெட்டியபின் ,விதைகளையும் நார்போன்ற பகுதிகளையும் நீக்கிவிட்டு ,சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டுக் கூழாக அரைக்கவும். சா்க்கரைப்பாகு தயாரித்து அதில் பழச்சாறைக் கலந்து கொதிக்க விடவும்.
கெட்டியான திரவம் ஆகும். வரையில் கொதிக்க வைத்து சி்ட்ரிக் அமிலம் சோக்கவும். எசன்ஸ் கலந்து ,பாட்டில்களில் பப்பாளி ஜாமைஎடுத்து வைக்கவும்.
சத்தும் பயனும்
வைட்டமின் A அதிகம் உள்ளது கண் பார்வைக்கு நல்லது.இரும்புச் சத்தை தரக்கூடியது. கர்ப்பப் பையை சுத்தப்படுத்தும் தன்மை இதற்கு இருப்பதால் பெண்கள் அடிக்கடி பப்பாளியைச் சாப்பிட்டு பயனடையலாம். கர்ப்பக் காலத்தில் இதை சாப்பிடக்கூடாது...
Labels: ஜாம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home