வள்ளிக்கெழவி!- மருது அழகுராஜ்
வள்ளிக்கெழவி
வெளக்கெண்ணெய் பாட்டிலோடு
வேகமா ஊருக்குள் போனா
எங்கள் ஊர் சனத்தின்
எண்ணிக்கையில்
ஒன்னு
இன்று கூடப்போகிறது
என்று அர்த்தம்....
எங்கள் கிராமத்தில்
பொறந்த பிள்ளைகளில்
நூறில் தொன்னூறை
கைபிடித்து இழுத்து வந்து
பூமிக்கு அறிமுகம் செய்தவள்....
எங்க ஊரு
புள்ளைகளை
முதலில் நிர்வாணமாய்
பார்த்தவளும்
நீராட்டியவளும்
முதல் ஆடை கட்டிவிட்டவளும்
அந்த முதிர்ந்த வள்ளிக்கெழவிதான்
பிள்ளைப் பேறு பார்ப்பதில்
அவள் ஒரு
கைதேர்ந்த மருத்துவச்சி
அடி வயித்த
தடவிப் பார்த்துட்டு
ஆணா, பெண்ணா என்று
சரியாக கணிக்கும்
சக்தியுண்டு....
ஆனா,
வெளியில் சொல்லாது
ரகசியம் காப்பாள்
இப்போது அரசாங்கம்
ஸ்கேன் சென்டருக்கு
இடும் கட்டளையை
தானாகவே கடைபிடிச்சவ....
சளி அடைச்சிருக்கேன்னு
பச்சைக் குழந்தையின்
மூக்கில் வாய் வைத்து
'பச்' என்று சளி உறிஞ்சும் சகிப்பு....
பிள்ளை அழலையேன்னு
கையை பிசைந்துகொண்டே
பாதத்தை சுண்டி
பக்குவம் செஞ்சு
குழந்தையின் வீல் சத்தம்
கேட்கும் வரை போராடும் வேகம்
பால் கட்டிக்கிருச்சே - ன்னு
தாயின் மார்பிடித்து
பால் பீய்ச்சி
சகஜநிலைக்கு கொண்டுவரும்
சாதுர்யம்....
மூக்கை நல்லா
மேல் நோக்கி இழுத்துவிடு
சப்பை மூக்கா போச்சுனா
சப்பான்ல தான்
பொண்ணு கேக்கணும்
காரியத்தின் நடுவிலும்
கெழவியின் கேலி கிண்டலுக்கு
கொறைவிருக்காது.....
பச்சப்புள்ள உள்ள வீட்டில்
பிள்ளைக் கெழங்கு
வசம்பு
வெளக்கெண்ணெய்
பக்கத்துலயே இருக்கணும்
புரிஞ்சுதா?
அறிவுறைகளை
தன் தடித்த குரலால்
கட்டளைகளாக்கும் கம்பீரம்
புள்ளதாச்சிக்கு
பத்திய லேகியம் செய்யும்
பக்குவம் சொல்லி
தொப்புள் கொடி
விழுந்தவுடன் செய்ய வேண்டியதை
பட்டியலிட்டுவிட்டு
தட்டில் வச்சித் தரும்
தட்சணையுடன்
தன் வீடு புறப்படுவாள்
போகும் போது
புள்ளத்தாச்சியின்
புருசனைக் கூப்பிட்டு
கெணத்துத் தண்ணிய
ஆறு வந்தா
அடிச்சிட்டுப் போகப் போவுது
விரதம்னு நெனச்சிக்கிட்டு
வெளி வேலையைப் பாரு
மறக்காம
நினைவுபடுத்திவிட்டு
தன் மனை நோக்கி
பயணமாவாள்....
தீட்டுக்கழிப்பதற்கு
முப்பதாம் நாள்
தப்பாம வந்து போவாள்
ஆனா...
ஊருக்கே பிள்ளைப் பேறு
பாக்கும்
வள்ளிக்கெழவிக்கோ
வாரிசு இல்லை!
நான் இழுத்துப் போட்ட
அத்தனை பிள்ளையும்
எம் பிள்ளைதாம்பா....
அவளின் பதில்
ஆணித்தரமாய் இருந்தாலும்
உள்ளே ஒரு
ஏக்கம் இழையோடும்.
சமீபகாலமாவே
வள்ளிக் கெழவிக்கு
நடையொடை இல்லை.
பேறு காலம் பாக்குறதில்லை....
ஒரு வழியா வள்ளிக்கெழவி
போனவாரம்
போய்ச் சேர்ந்துட்டா
ஊரே அழுதுச்சு -
குறிப்பா....
கெழவி கையால
புள்ளப் பெத்துக்கிட்ட
பொம்பள புள்ளக
தாயை இழந்தது போல்
ஒப்பாரி வுட்டு அழுதது
ரொம்ப மனசப் பிசைந்தது
புள்ள அழுகலைன்னு
பாதத்தை சுண்டி
அழுக வப்பியே
நாங்க நீ சுண்டாமலே
கதறுகிறோமே! சுருண்டு கிடக்கியே!
அப்படீன்னு 'ரெட்டப் புள்ளக்காரி'
சித்திரா விட்ட ஒத்த வரி
ஊருசனத்தையே
உலுக்கிப்புடுச்சு
இவ்வளவு ஏன்?
குழிக்குள்ள கெழவியை போட்டு
மண்ணுத் தள்ளுன
வெட்டியான் சுப்பன் கூட
என் ஆத்தா
வவுத்தில இருந்து
என்னை மண்ணுக்கு இழுத்தாந்தியே
ஒன்னை நான்
மண்ணுக்குள்ள
அனுப்புகிறேனே
போய்வா! ஆத்தான்னு
கும்புட்டு....அழுதபோது
ஊருச்சனம் உறைஞ்சுபோச்சு
வள்ளிக்கெழவி
எங்கள் கிராமத்திற்கு
வந்து சென்ற
அன்னை தெரசா....
இப்பவும்
பிரசவ வலி
யாருக்கு வந்தாலும்
கெழவிய நெனச்சி
காணிக்கை முடியிறது
எங்க ஊருக்கு வழக்கமாயிடுச்சு!
வெளக்கெண்ணெய் பாட்டிலோடு
வேகமா ஊருக்குள் போனா
எங்கள் ஊர் சனத்தின்
எண்ணிக்கையில்
ஒன்னு
இன்று கூடப்போகிறது
என்று அர்த்தம்....
எங்கள் கிராமத்தில்
பொறந்த பிள்ளைகளில்
நூறில் தொன்னூறை
கைபிடித்து இழுத்து வந்து
பூமிக்கு அறிமுகம் செய்தவள்....
எங்க ஊரு
புள்ளைகளை
முதலில் நிர்வாணமாய்
பார்த்தவளும்
நீராட்டியவளும்
முதல் ஆடை கட்டிவிட்டவளும்
அந்த முதிர்ந்த வள்ளிக்கெழவிதான்
பிள்ளைப் பேறு பார்ப்பதில்
அவள் ஒரு
கைதேர்ந்த மருத்துவச்சி
அடி வயித்த
தடவிப் பார்த்துட்டு
ஆணா, பெண்ணா என்று
சரியாக கணிக்கும்
சக்தியுண்டு....
ஆனா,
வெளியில் சொல்லாது
ரகசியம் காப்பாள்
இப்போது அரசாங்கம்
ஸ்கேன் சென்டருக்கு
இடும் கட்டளையை
தானாகவே கடைபிடிச்சவ....
சளி அடைச்சிருக்கேன்னு
பச்சைக் குழந்தையின்
மூக்கில் வாய் வைத்து
'பச்' என்று சளி உறிஞ்சும் சகிப்பு....
பிள்ளை அழலையேன்னு
கையை பிசைந்துகொண்டே
பாதத்தை சுண்டி
பக்குவம் செஞ்சு
குழந்தையின் வீல் சத்தம்
கேட்கும் வரை போராடும் வேகம்
பால் கட்டிக்கிருச்சே - ன்னு
தாயின் மார்பிடித்து
பால் பீய்ச்சி
சகஜநிலைக்கு கொண்டுவரும்
சாதுர்யம்....
மூக்கை நல்லா
மேல் நோக்கி இழுத்துவிடு
சப்பை மூக்கா போச்சுனா
சப்பான்ல தான்
பொண்ணு கேக்கணும்
காரியத்தின் நடுவிலும்
கெழவியின் கேலி கிண்டலுக்கு
கொறைவிருக்காது.....
பச்சப்புள்ள உள்ள வீட்டில்
பிள்ளைக் கெழங்கு
வசம்பு
வெளக்கெண்ணெய்
பக்கத்துலயே இருக்கணும்
புரிஞ்சுதா?
அறிவுறைகளை
தன் தடித்த குரலால்
கட்டளைகளாக்கும் கம்பீரம்
புள்ளதாச்சிக்கு
பத்திய லேகியம் செய்யும்
பக்குவம் சொல்லி
தொப்புள் கொடி
விழுந்தவுடன் செய்ய வேண்டியதை
பட்டியலிட்டுவிட்டு
தட்டில் வச்சித் தரும்
தட்சணையுடன்
தன் வீடு புறப்படுவாள்
போகும் போது
புள்ளத்தாச்சியின்
புருசனைக் கூப்பிட்டு
கெணத்துத் தண்ணிய
ஆறு வந்தா
அடிச்சிட்டுப் போகப் போவுது
விரதம்னு நெனச்சிக்கிட்டு
வெளி வேலையைப் பாரு
மறக்காம
நினைவுபடுத்திவிட்டு
தன் மனை நோக்கி
பயணமாவாள்....
தீட்டுக்கழிப்பதற்கு
முப்பதாம் நாள்
தப்பாம வந்து போவாள்
ஆனா...
ஊருக்கே பிள்ளைப் பேறு
பாக்கும்
வள்ளிக்கெழவிக்கோ
வாரிசு இல்லை!
நான் இழுத்துப் போட்ட
அத்தனை பிள்ளையும்
எம் பிள்ளைதாம்பா....
அவளின் பதில்
ஆணித்தரமாய் இருந்தாலும்
உள்ளே ஒரு
ஏக்கம் இழையோடும்.
சமீபகாலமாவே
வள்ளிக் கெழவிக்கு
நடையொடை இல்லை.
பேறு காலம் பாக்குறதில்லை....
ஒரு வழியா வள்ளிக்கெழவி
போனவாரம்
போய்ச் சேர்ந்துட்டா
ஊரே அழுதுச்சு -
குறிப்பா....
கெழவி கையால
புள்ளப் பெத்துக்கிட்ட
பொம்பள புள்ளக
தாயை இழந்தது போல்
ஒப்பாரி வுட்டு அழுதது
ரொம்ப மனசப் பிசைந்தது
புள்ள அழுகலைன்னு
பாதத்தை சுண்டி
அழுக வப்பியே
நாங்க நீ சுண்டாமலே
கதறுகிறோமே! சுருண்டு கிடக்கியே!
அப்படீன்னு 'ரெட்டப் புள்ளக்காரி'
சித்திரா விட்ட ஒத்த வரி
ஊருசனத்தையே
உலுக்கிப்புடுச்சு
இவ்வளவு ஏன்?
குழிக்குள்ள கெழவியை போட்டு
மண்ணுத் தள்ளுன
வெட்டியான் சுப்பன் கூட
என் ஆத்தா
வவுத்தில இருந்து
என்னை மண்ணுக்கு இழுத்தாந்தியே
ஒன்னை நான்
மண்ணுக்குள்ள
அனுப்புகிறேனே
போய்வா! ஆத்தான்னு
கும்புட்டு....அழுதபோது
ஊருச்சனம் உறைஞ்சுபோச்சு
வள்ளிக்கெழவி
எங்கள் கிராமத்திற்கு
வந்து சென்ற
அன்னை தெரசா....
இப்பவும்
பிரசவ வலி
யாருக்கு வந்தாலும்
கெழவிய நெனச்சி
காணிக்கை முடியிறது
எங்க ஊருக்கு வழக்கமாயிடுச்சு!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home