காத்திருக்கிறேன் - ஆதி

பனி இரவின் மறுநாளைய
காற்றை போல
நாளும் நீ விட்டு செல்லும்
நினைவுகளின் குளிரை
ஏந்தி திரிகிறேன்
காதலின் உன்மத்ததில்
அது தரும் இனிமையில்
அது உண்டாக்கும்
இனம் புரியா மகிழ்ச்சியில்
பித்தனென திளைக்கிறேன்
பூக்களின் மிக அழகிய தேவதையே
மொழியின் ரசமான சொற்களையெல்லாம்
தெரிவு செய்து
உன்னை பற்றி கவிதையெழுதுகிறேன்
அவையாவும்
இசை குறிப்புக்களெல்லாம்
உன் ஒலியற்ற முறுவலிடம் அடைவதை போல
நீ உட்சரிக்கும்
ஒரு 'butuuu'யிடம் தோற்று போகிறது
என் உள்முக தேடல்கள் அனைத்தும்
உன் முகத்தேடலகளாய்
உருமாறி கொண்டன
இலக்கு தெரியமலே
உன்னை தேடி ஒரு
பயணத்தை துவக்கிவிட்டன
அது தோல்வியின் வேட்டை நிலத்திலோ
வெற்றியின் நந்தவனத்திலோ முடியலாம்
முடிவே தெரியாத ஒன்றாகவும் ஆகலாம்
எனினும் என் பயணங்கள்
துவங்கிவிட்டன உன்னை நோக்கி
நீ ஒரு இழுத்து சாத்தப்பட்ட
கதவை போலவே இருந்தாலும்
கோயிலின் நடை திறக்க
காத்திருக்கும் பக்தனை போலவே
காத்திருக்கிறேன் உன் மன வாசலில்
Votes
Labels: ஆதி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home