Tuesday, 5 March 2013

குழந்தைகளுக்கு மலச்சிக்கல்..!Child problem!

Child problem! - Child Care Tips and Informations in Tamil

மலச்சிக்கல் என்பது குழந்தைகளைப் பொறுத்தவரை உண்மையிலேயே பெரிய பிரச்சினை தான். இதற்கு பெரிய காரணம் என்று சொன்னால் அது நார்ச்சத்து குறைபாடு தான். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க உணவு முறையை சற்று மாற்ற வேண்டும்.

குழந்தைகளின் உணவில் முழு தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளும், நார்ச்சத்து நிரம்பிய தானியங்கள் - காய்கறிகள் மற்றும் பழங்கள் தாராளமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். (இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ், ஆரஞ்சு மற்றும் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.)

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்கு பல வகையான சத்துக்களும் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், குழந்தைப் பருவத்திலேயே நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டு பழகி விடும் குழந்தைகள், வயது வந்த பருவத்திலும் அதை அப்படியே தொடர்வார்கள். இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் நிரந்தரமான விடுதலை கிடைக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home