Sunday, 7 April 2013

வெல்லம், பருப்பு மோதகம்

Steamed Modak Recipe Aid0174கொழுக்கட்டை எனப்படும் மோதகம் அரிசி, வெல்லம், கடலைப்பருப்பு சேர்த்து செய்யப்படுவதால் சத்து நிறைந்தது. விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமே இதை செய்ய வேண்டும் என்பதில்லை விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு செய்து உண்ணக் கொடுக்கலாம். 
 
தேவையான பொருட்கள்
 
அரிசி மாவு - 4 கப் 
 கடலைப் பருப்பு - 2 1/2 கப் 
வெல்லம் - அரைக் கிலோ 
தேங்காய்த்துருவல் - 2 1/2 கப் 
உப்பு - ஒரு தேக்கரண்டி

பூரணம் செய்முறை 
 
கடலைப் பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பருப்பை குழைய வேகவைத்து நீரை வடிகட்டவும். 
 
ஒரு பாத்திரத்தில் போட்டு, கைகளால் அழுத்தி பிசையவும். பருப்பு ஒன்றிரண்டாக நசுங்கி, அரைத்ததுபோல் வரவேண்டும். 
 
இத்துடன் வெல்லத்தைப் போட்டு நன்கு தட்டவும். பிறகு துருவியத் தேங்காயை வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்க வதக்கி எடுத்து இதோடு சேர்க்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி, பொரித்த கிஸ்மிஸ் எடுத்து பூரணத்தோடு சேர்த்து பிசையவும்.

கொழுக்கட்டை செய்முறை அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு வேகவைக்கவும். 
 
மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவினை போட்டு, அதில் இரண்டு கப் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு அழுத்திக் கிளறிவிடவும்.
 
 பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் அளவாக ஊற்றி, கைகளால் பிசைந்து, மாவு மிருதுவாக இருக்குமாறு செய்யவும். எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக் கொள்ளவும். பிறகு கைகளால் அழுத்தி அதனைக் கிண்ணம் போல் செய்யவும். அதனுள்ளே சிறிது பூரணத்தை வைக்கவும். 
 
பின்னர் அதன் ஓரங்களை, விரும்பிய வடிவில் அழகாக ஒரே அளவாக மூடவும்.
 
 பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி, பானையில் வைத்து வேகவிடவும். 15 நிமிடம் கழித்து கொழுக்கட்டை வெந்த உடன் எடுத்து விடலாம். சுவையான, சத்து நிறைந்த கொழுக்கட்டை தயார். 
 
குட்டீஸ்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home