வாழை பழ கேக்
தேவையான பொருட்கள்
1 . நன்கு பழுத்த பெரிய வாழை பழங்கள் - 2
2 . சாதாரண கோதுமை மா - 2 கப் (500 ml)
3 . சீனி - 1 கப் ( 250 ml அளவு கரண்டி)
4 . பட்டர் அல்லது மாஜரீன் அல்லது கனோலா எண்ணெய் . -1 /3 கப் ( 80 ml)
5 . தயிர் (3 % கொழுப்பு yogurt ) -1 /3 கப் ( 80 ml)
6 . முட்டை - 2
7 . உப்பு -1 /2 தே. கரண்டி
8 . பேக்கிங் பவுடர் -1 /2 தே. கரண்டி
9 . பேக்கிங் சோடா - 1 /2 தே. கரண்டி
10 . வனிலா -1 /2 மே கரண்டி
11 . கறுவா தூள் -1 /2 தே. கரண்டி (விரும்பினால் மட்டும்)
செய்முறை
1 . Oven ஐ 180 பாகை செல்சியசில் சூடாக்கவும்
2 . கேக் தட்டுக்கு மாஜரின்/ பட்டர் பூசி, 2 மேசை கரண்டி சீனியை போட்டு, சீனி முழு உட்பரப்பில் ஒரு சீரான படையை உருவாக்குமாறு செய்யவும் (சீனி மிகுதி இருந்தால் அதை கேக் இனுள் சேர்க்கலாம்)
3 . பட்டர்/ மாஜரீன் ஐ குளிருட்டியில் இருந்து எடுத்து ஒரு பெரிய பத்திரத்தில் இட்டு அறை வெப்பநிலைக்கு வர 15 நிமிடம் வைக்கவும் (கனோலா எண்ணெய் பாவித்தல் இந்த 15 நிமிட காத்திருப்பு தேவையற்றது)
4 . பட்டர்/ மாஜரீன் உள்ள பாத்திரத்தினுள் தயிர், முட்டை, சீனி என்பவற்றை போட்டு நன்கு கலக்கவும் (சாதாரண அகப்பை போதுமானது/ கலக்கும் மின்சார உபகரணம் இருந்தால் பாவிக்கலாம்)
5 . வாழை பழத்தை மசித்து கலவையினுள் கொட்டி கலக்கவும், பின், உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வனிலா, கறுவா தூள் என்பன சேர்த்து நன்கு கலக்கவும்.
6 . இறுதியாக கோதுமை மாவை சிறிது சிறிதாக கலந்து, மா கட்டி இல்லாதவாறு கலக்கவும்.
7 கலவையை கேக் தட்டில் ஊற்றி சூடாக்கிய oven இல் வைத்து 35 - 45 நிமிடம் (பல்லு குத்தும் ஈரக்கால் குத்தி வெளியே எடுக்கும் பொது எதுக்கும் ஒட்டாது வரும் வரை) சமைத்தால் சுவையான வாழை பழ கேக் தயார்.
Labels: கேக்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home