பாரதியார் கவிதைகள் 4
வந்தே மாதரம்
வந்தே மாதர மென்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குது மென்போம் (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தி லெய்தின ராயின்
வேதிய ராயினு மொன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினு மொன்றே (வந்தே)
ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றோ?
சினத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
ஆயிர முண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முட்
சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ? (வந்தே)
ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கு மந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை யிகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
ஆத்ம ஜயம்
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும், கண்ணிலும் எண்ணிலு
மேவு பரா சக்தியே.
என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?
கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும், கண்ணிலும் எண்ணிலு
மேவு பரா சக்தியே.
என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?
பகைவனுக் கருள்வாய்
பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்
புகைநடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான். (பகைவனுக்)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடிவள ராதோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ - நன்னெஞ்சே (பகைவனுக்)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)
தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினன்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே (பகைவனுக்)
பகைவனுக் கருள்வாய்
புகைநடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான். (பகைவனுக்)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடிவள ராதோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ - நன்னெஞ்சே (பகைவனுக்)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)
தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினன்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே (பகைவனுக்)
மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
விடுதலை வெண்பா
சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்தி நிலை
காண்போ மதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.
பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டா லாங்கதுவே வீடாம் - நெறி கொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தாற் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னா லதுவே சுகம்.
சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தா ளவள்.
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்தி நிலை
காண்போ மதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.
பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டா லாங்கதுவே வீடாம் - நெறி கொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தாற் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னா லதுவே சுகம்.
சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தா ளவள்.
Labels: பாரதியார் கவிதைகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home