மஹா கவி பாரதியார் பாடல்கள் - தேசீய கீதங்கள் -பாரத தேசம் 5
தேசீய கீதங்கள்5.பாரத தேசம் | ||
| ராகம்-புன்னாகவராளி பல்லவி | ||
| பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் | ||
| சரணங்கள் | ||
| 1. | வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். | (பாரத) |
| 2. | சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்; சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். | (பாரத) |
| 3. | வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்; எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். | (பாரத) |
| 4. | முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே, நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே | (பாரத) |
| 5. | சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் | (பாரத) |
| 6. | கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்; சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் | (பாரத) |
| 7. | காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்; ராசபுத் தானத்து வீரர்தமக் கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் | (பாரத) |
| 8. | பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும் பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்; கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார் காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். | (பாரத) |
| 9. | ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்; ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்; ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்; உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். | (பாரத) |
| 10. | குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம், கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். | (பாரத) |
| 11. | மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம் கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். | (பாரத) |
| 12. | காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்; கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்; ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்; உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். | (பாரத) |
| 13. | சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்; நீதிநெறி யினின்று பிறர்க்குத வும் நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். | (பாரத) |
Labels: பாரதியார் கவிதைகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home