இனிமையான தோற்றத்திற்கு 'சாக்லெட் ஃபேஷியல்' பண்ணுங்க...
சாக்லெட் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில் அதன் சுவை அவ்வளவு ருசியாக இருப்பதே ஆகும். அத்தகைய சாக்லேட்டை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதேப் போல் அந்த சாக்லெட் சருமத்திற்கும் அழகான பொலிவைத் தரும் சக்தியுடையது. பொதுவாக சாக்லெட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. அந்த சாக்லெட்டையே பயன்படுத்தி, சருமத்திற்கு ஃபேஷியல், ஸ்கரப் என்று செய்தால் நிச்சயம் முகம் இனிமையான தோற்றத்தில் காணப்படும்.
வேண்டுமெனில் நிறைய அழகுப் பொருட்களில் சாக்லெட் ஃப்ளேவர் வந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதிலும் அவை மிகவும் விலை மதிப்புடையது. அவ்வாறு அதிகமாக பணத்தை செலவழித்து, வாங்கி முகத்திற்கு போடுவதை விட, வீட்டிலேயே சாக்லெட்டை வைத்து பல வகையான ஃபேஷியல் செய்யலாம். சாக்லெட் தயாரிக்கப் பயன்படுத்தும் கொக்கோ பவுடர் சற்று விலை அதிகமானது தான். ஆனால் முகத்தை பொலிவாக்க வெளியே சென்று கண்ட கண்ட பொருட்களை வாங்கி, முகத்திற்கு போடுவதை விட, வீட்டிலேயே இயற்கைப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டதை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இப்போது அந்த சாக்லெட்டை வைத்து எப்படியெல்லாம் முகத்தை பொலிவாக்கலாம் என்று பார்ப்போமா!!
Labels: அழகு குறிப்புகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home