கூந்தலை பொலிவாக்கும் பழ ஹேர் கண்டிஷனர்கள்!!!
எப்போது தலைக்கு குளித்தாலும், குளித்தப் பின்னர் கூந்தலைப் பார்த்தால், அடங்காமல் அதிக வறட்சியுடன் இருக்கும். எனவே அந்த வறட்சியைத் தடுக்க, கூந்தலை ஷாம்பு போட்டு அலசியப் பின்னர் கண்டிஷனர் போட்டு குளிக்கச் சொல்வார்கள். சொல்லப்போனால், கண்டிஷனர் பயன்படுத்தினால், கூந்தல் வறட்சியை தடுத்து, பொலிவோடு வைக்கலாம். ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்திருக்கும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால், சிலருக்கு கூந்தல் அதிகமாக உதிரத் தொடங்கும்.
இருப்பினும் சிலர் கெமிக்கல் கலந்திருப்பது தெரிந்தும், அதைப் பயன்படுத்துவதை நிறுத்தாமல், விலை மதிப்புள்ள கண்டிஷனரைப் பயன்படுத்துவார்கள். ஒரு முறை கெமிக்கல் ஒப்புக் கொள்ளவில்லையெனில், அதை விடாமல் வேறொன்று வாங்கி பயன்படுத்தினால் மட்டும் கூந்தல் உதிர்வது நின்றுவிடுமா என்ன? அவ்வாறு மறுமுறை தரமான கெமிக்கல் கலந்துள்ள கண்டிஷனரைப் பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் கூந்தலை மென்மையாக்கும் பழங்களை வைத்து கண்டிஷனர் செய்தால், கூந்தல் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.
Labels: அழகு குறிப்புகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home