Monday, 28 January 2013

ஆரஞ்ச் ஜிங்கிள்ஸ் ஜூஸ



தேவையான பொருட்கள்

ஆரஞ்சுப்பழம்_6 (கமலா, சாத்துக்குடியாகக் கூட இருக்கலாம்)
சுக்கு_சிறிது,
குளுக்கோஸ2 டேபிள் ஸ்பூன்,
உப்பு1 சிட்டிகை.

செய்முறை

ஆரஞ்சுப்பழத்தைத் தோல் நீக்கி, சுளையை தனியாக எடுத்துக் கொண்டு, சுக்கு+உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். (அதிக நேரம் மிக்ஸியில் அரைத்தால் துவர்ப்புச் சுவை கூடி விடும்)

ஆரஞ்சுப்பழத்திலேயே தண்ணீர் இருப்பதால், தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

 குளுக்கோஸ் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பரான எனர்ஜி ஃபுட் இதுதான் என்பீர்கள்.

எந்த நேரத்திலும் பருகலாம்.


டயட்

விட்டமின்_சி அடங்கியிருக்கு.

அதுக்குமேல இதுல இருக்குற கொலாஜன் இரத்த ஓட்டம் சரியானபடி இருக்கவும், நம்ம உடம்புல எந்தவிதமான நச்சுக்கிருமிகள் தாக்காமல் இருக்கவும் உதவியா இருக்கும்.

 இரத்த சோகை உள்ளவங்க சாப்பிட்டா அயர்ன் சத்து நம்ம உடம்புல சேர்ந்து செயல்பட இது துணை புரியுது.

மேலும் கிட்னியில கல் உருவாகாம இருக்கவும் பாதுகாப்பு வளையமா இருக்கு. காலையில உணவு சாப்பிட்டதும் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிடறது ரொம்பவும் நல்லது.

பெயரைக் கேட்கும்போதே சும்மா நாக்கில் நீர் எகிறுகிறது. சாப்பிட்டுப் பார்த்தா?

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home