Tuesday, 5 February 2013

நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்

நெல்லிக்காய்
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய் – 5 அல்லது 6
  2. சர்க்கரை – 5 டேபிள்ஸ்பூன்
  3. சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
  4. உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயைப் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.
  2. சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.
  3. ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை விட்டு அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறி விடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தப்பின், அதில் நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெல்லிக்காயில் சர்க்கரைப் பாகு நன்றாக ஒட்டும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாகு சற்று நிறம் மாறி காயுடன் நன்றாகக் கலந்தப் பின் கீழே இறக்கி வைக்கவும்.
  4. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home