சிறுகீரை சூப்
தேவையான பொருள்கள்:
- சிறுகீரை = 1 கட்டு
- சீரகம் = 1 ஸ்பூன்
- வெங்காயம் = 1
- தக்காளி = 2
- இஞ்சி = சிறிது
- அரிசி மாவு = 2 ஸ்பூன்
- வெண்ணெய் = 1 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
- சிறுகீரைகளை வாங்கி கீரையை ஆய்ந்து எடுத்து விட்டு வெறும் காம்பு, வேர் பகுதியை மட்டும் நன்றாக அலம்பி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- இதை சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது நறுக்காமலோ 6 கப் தண்ணீர் விடவும்.
- தக்காளி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும். சீரகம் மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.
- இதை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து சுட சுட பரிமாறலாம்.
குறிப்பு:
- வெண்ணெய் சேர்க்க பிடிக்கா விட்டால் தவிர்த்து விடலாம்.
- சிறுக்கீரையில் புரதம், மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கலோரிகள் உள்ளது.
- இதனால் மலச்சிக்கல் குறையும்.
- கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவை குறையும்.
- மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்
Labels: ரசம் / சூப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home