Tuesday, 5 February 2013

காலிப்ளவர் ரசம்


தேவையானப் பொருட்கள்:
  1. காலிப்ளவர் -1
  2. வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. பச்சை மிளகாய் -4
  5. கறிவேப்பிலை -சிறிதளவு
  6. கொத்தமல்லி தழை -சிறிதளவு
  7. பாசிப்பருப்பு – கால் கப்
  8. மஞ்சள் தூள் -அரை டேபிள் ஸ்பூன்
  9. மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
  10. உப்பு -சிறிதளவு
  11. எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  12. வெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
  1. கடுகு -1 டீஸ்பூன்
  2. வற்றல் மிளகாய்-2
  3. அன்னாசி பூ-1
  4. பட்டை -1
  5. மிளகு -1 டீஸ்பூன்
  6. சீரகம் -1 டீஸ்பூன்
செய்முறை:

  1. முதலில் காலிப்ளவரை தனி தனி இதழ்களாக சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த பூக்களைப் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து விட்டு வடிகட்டி தனியே வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய்/வெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, அன்னாசி பூ, பட்டை, மிளகு, சீரகம், வற்றல் மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
  3. பின் நீள நீளமாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  போட்டு வதக்கவும்.
  4. இவை வதங்கிய பின் காலிப்ளவர், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து உடையாமல் கிளறவும்.
  5. பின் 3 கப் அளவில் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  6. பின்பு ஸ்டீம் போனதும் கொத்தமல்லி தழை தூவி சூடாக பறிமாறவும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home