Tuesday, 5 February 2013

கொட்டு ரசம்


தேவையான பொருள்கள்:
  1. மிளகு = 1 ஸ்பூன்
  2. மிளகாய் வற்றல் = 3
  3. சீரகம் = அரை ஸ்பூன்
  4. புளி = எலுமிச்சை அளவு
  5. கடுகு = அரை ஸ்பூன்
  6. பெருங்காயம் = சிறிதளவு
  7. எண்ணெய் = 1 ஸ்பூன்
  8. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியை கரைத்து வடிகட்டவும். மிளகு, சீரகம் உப்பு சேர்த்து மிளகாய் வற்றலை கிள்ளி போடவும். இதை கொதிக்க விடவும். கொதிக்க துவங்கி நுரைத்து வரும் போது இறக்கி விடவும்.
  • எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து விடவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான கொட்டு ரசம் தயார். இதை ரைஸோடு சாப்பிட சிறப்பாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • மிளகில் புரதம், ஸ்டார்ச் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது. இதனால் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் எளிதில் ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home