Tuesday, 5 February 2013

சீரக ரசம்

தேவையான பொருள்கள்:
  1. புளி = அரை எலுமிச்சை அளவு
  2. சீரகம்= 1 ஸ்பூன்
  3. மிளகாய் வற்றல் = 1
  4. தனியா = அரை ஸ்பூன்
  5. மிளகு=  அரை ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் = 1
  7. தக்காளி = 2
  8. எண்ணெய் = 1 ஸ்பூன்
  9. கடுகு = அரை ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியை கரைத்து வடிகட்டவும். சீரகத்தையும், ஒரு மிளகாய் வற்றலையும், தனியாவையும் கரகரப்பாக பொடி செய்து போடவும்.
  • மிளகை உடைத்து போடவும். தக்காளியை நறுக்கி சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி போடவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விட்டு சிறிது தண்ணீர் விட்டு இறக்கி கொத்தமல்லி தூவவும்.
சுவையான சீரக ரசம்  தயார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home