Tuesday, 5 February 2013

தூதுவளை ரசம்

தூதுவளை

தேவையானப்பொருட்கள்:
  1. தூதுவளை-1 கப்
  2. தக்காளி-1
  3. பூண்டு-4 பல்
  4. புளி-நெல்லிக்காய் அளவு
  5. உப்பு-தே.அளவு
  6. துவரம் பருப்பு-கால் கப்
  7. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  8. ரசப் பொடி-1 டே.ஸ்பூன்

தாளிக்க:

  1. நெய்-2 டீஸ்பூன்
  2. கடுகு-1 டீஸ்பூன்
  3. பெருங்காயம்-2
  4. கறிவேப்பிலை-1 கொத்து
  5. கிள்ளிய வர மிளகாய்-2
  6. கொத்தமல்லித் தழை-அலங்கரிக்க
செய்முறை:
  1. முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
  2. தூதுவளை இலைகளை கவனமாக முள் குத்தாமல் பார்த்து ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து நீரில் அலசி,தண்ணீரை வடித்து வைக்கவும்.
  3. பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு சுத்தம் செய்த தூதுவளை இலைகளை போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
  4. புளியை கரைத்து  எடுத்து பருப்புத் தண்ணீருடன் சேர்த்து,அதனுடன் ரசப் பொடியையும் கலந்து(ரசப் பொடிக்கு-மிளகு,சீரகம்,தனியா-தலா 1 டீஸ்பூன்,2 வர மிளகாய் வைத்து பொடி செய்து அதனுடன் 4 பல் பூண்டையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.இந்த முறையில் செய்தால் ரசம் மிக வாசமாக இருக்கும்), தக்காளியையும் கரைத்துக் கொள்ளவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
  5. அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து மீதமுள்ள நெய்யை விட்டு கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை,வர மிளகாய் தாளித்து,வதக்கிய தூதுவளை இலைகளை சேர்த்து,கரைத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரை ஊற்றவும்.பூண்டை தட்டி போடவும்.(அல்லது ரசப் பொடியுடனும் சேர்க்கலாம்)
  6. ரசம் நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home