Tuesday, 5 February 2013

பூண்டு ரசம்

 
தேவையானப் பொருட்கள்:
  1. புளி-எலுமிச்சையளவு
  2. முழு பூண்டு-ஒன்று
  3. காய்ந்தமிளகாய்-இரண்டு
  4. கடுகு-ஒரு தேக்கரண்டி
  5. பெருங்காயம்- கால் தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை-ஒரு கொத்து
  7. உப்பு-தேவைகேற்ப
  8. மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி
  9. நல்லெண்ணெய்- மூன்று தேக்கரண்டி
செய்முறை:

  1. புளியை ஊறவைத்து கரைத்து அந்த புளி தண்ணீரில் தக்காளியைச் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  2. பூண்டை தோலுரித்து இலேசாக நசுக்கி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டை போட்டு இளஞ் சிவப்பாக வதக்கி தனியே எடுத்துவைக்கவும்.
  4. பின்பு அதே பாத்திரத்தில் புளி கரைச்சலை ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் மஞ்சத்தூளைப் போட்டு கொதிக்கவிடவும்.
  5. நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அதில் ரசப்பொடி மற்றும் வதக்கிய பூண்டை போட்டு கலக்கி விட்டு ஒரு இரண்டு நிமிடம் மீண்டும் கொதிக்கவிடவும்.
  6. பின்பு மற்றொரு சிறிய பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு காய்ந்தமிளகாய் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டவும்.
குறிப்பு :

வாரம் ஒரு முறை பூண்டு ரசம் செய்து சாப்பிடுவது உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home