Tuesday, 5 February 2013

எலுமிச்சை ரசம்


தேவையானப்பொருட்கள்:
  1. எலுமிச்சை சாறு- கால் கோப்பை
  2. தக்காளி-ஒன்று
  3. பச்சைமிளகாய்- இரண்டு
  4. மஞ்சத்தூள் -ஒரு சிட்டிகை
  5. காய்ந்தமிளகாய்-2
  6. கடுகு-ஒரு தேக்கரண்டி
  7. சீரகம்-அரைதேக்கரண்டி
  8. மிளகு.
  9. பூண்டு -இரண்டு பற்கள்
  10. பெருங்காயம்-கால் தேக்கரண்டி
  11. நல்லெண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை-ஒரு கொத்து
  13. உப்பு-தேவைகேற்ப
செய்முறை:
  1. எலுமிச்சை சாறுடன் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  2. தக்காளியை கைகளால் கரைக்கவும்.மிளகு சீரகம் பூண்டை ஒன்றும்பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து நசுக்கி வைத்திருப்பதைப் போட்டு மஞ்சத்தூள் பெருங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
  4. பின்பு தக்காளி பச்சைமிளகாயை போட்டு வதக்கி எலுமிச்சை கலந்த நீரை ஊற்றி உப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லியைத் துவி இறக்கவும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home