பாகற்காய் சூப்
தேவையான பொருள்கள்:
- பாகற்காய் = 2
- பால் = அரை டம்ளர்
- வெங்காயம் = 1
- தக்காளி = 1
- பச்சை மிளகாய் = 1
- மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- பெருஞ்சீரகம் = அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
- பட்டை = 1
- கறிவேப்பிலை = சிறிதளவு
- எலுமிச்சை பழம் = பாதி
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
- கொத்தமல்லி இலை = சிறிதளவு
- பாகற்காயை நன்கு கழுவி நறுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி வைத்து கொள்ளவும்.
- வாணலியில் தேவையான அளவு எண்ணேய் விட்டு பெருஞ்சீரகம், உளுத்தம் பருப்பு, பட்டை போட்டு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- வதங்கியதும் வேக வைத்த பாகற்காயை போட்டு கிளறி சிறிது தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விட்டு பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து இறக்கவும்.
- இறக்கியவுடன் காய்ச்சிய பாலை ஊற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
மருத்துவ குணங்கள்:
- பாகற்காயில் வைட்டமின் “சி” 88 மி.கி., வைட்டமின் “ஏ” 126 மைக்ரோ கிராம், இரும்புச்சத்து 1.8 மி.கி. பாஸ்பரஸ், கால்ஷியம் ஆகியவை காணப்படுகிறது. குறைவான அளவில் வைட்டமின் “பி” உள்ளது.
- உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைப் போக்கும். பசியை தூண்டும். சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த உதவும். இந்த பாகற்காய் சூப் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
Labels: ரசம் / சூப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home