Monday, 4 February 2013

மாம்பழ ஜாம்




தேவையானப் பொருட்கள்:

மாம்பழக் கூழ்            -     1 கிலோ

சர்க்கரை            -    750 கிராம்

சிட்ரிக் அமிலம்        -    15 கிராம்

செய்முறை:

நன்றாக முதிர்ந்த சதைப்பற்று அதிகம் கொண்ட சிறந்த மாம்பழங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் பழங்களைக் கழுவிய பின் பழத்தின் மேல் தோலை எடுத்துவிட்டு பழச்சதையைத் தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

துண்டாக்கப்பட்ட அந்த பழச்சதையை மிக்ஸியில் போட்டு கூழ்போல் செய்து கொள்ளவும் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் பழக்கூழையும், சர்க்கரையையும் போட்டுக் காய்ச்சவும்.  ஜாம்பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.  கிளறும்போதே சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.  ஜாம் பதம் வந்தவுடன் இறக்கி, பாட்டில் அல்லது சுத்தமான டின்களில் ஊற்றி, காற்றுப் புகாமல் அடைத்து வைத்துக் கொள்ளவும்.  இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஈரமில்லாத ஸ்பூனைக் கொண்டு ஜாமை எடுக்க வேண்டும்.  கை படாமல் வைத்துக் கொண்டால் கெடாமல் இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home