பொம்பளைப் பெரியார்! - மருது அழகுராஜ்
தப்பு அடிக்கிறது,
எழவு சொல்றது,
குழி வெட்டுறது,
பொணத்த
பொதைக்கிறது,
எரிக்கிறது,
செத்த மாட்ட
தோலை உரிச்சுட்டு
தோண்டி பொதைக்கிறது,
கூலி வாங்காம
குடியானவுக வீட்டுக்கு
ஊத்துற கூழுக்கு
உழைக்கிறது,
இப்படி....
மாடா ஒழைக்கிற
மனுசாக்கள
நாம் 'சேரி'ன்னு
ஒதுக்கி வச்சோம்.
'செருப்புப் போட்டு
நடக்கப்புடாது'ன்னு
தடை விதிச்சோம்....
'ஊரு குளத்துல
தண்ணி எடுக்கப்புடாது'ன்னு
தடுத்து வச்சோம்.
'சட்டை அணியக்கூடாது'
'இடுப்பு வேட்டிய
மொழங்காலுக்கு மேல
ஏத்தி கட்டப்படாது
கணுக்காலுக்குக் கீழ
எறக்கியும்
கட்டப்படாது'ன்னு
உடுத்தற துணிக்கும்
நாம அளவுசொல்லி
ஒடுக்கிவெச்சோம்
வெலங்குக்குக் கீழா
நடத்துனோம்
ஆனா....
தடுக்கப்படுகிற
அணையிலருந்துதான்
தண்ணி வெள்ளமா
பெருக்கெடுத்து
வேகமா பாயுங்கிற மாதிரி!
இன்னைக்கு என்னாச்சு....
முழுப் பரீட்சையில
நம்ம அழகன் மக 'சித்ரா'
மாநிலத்திலேயே
மொத மார்க் வாங்கி
முன்னாடி வந்திருக்காளாம்!
டி.வி.க்காரனும்,
ரேடியோக்காரனும்
மைக்கைத் தூக்கிக்கிட்டு
காலனிப் பக்கமா
அணிவகுத்துப் போறாங்க.
அடுத்த ஜில்லா அறியாத
நம்ம ஊரு பேரை
இன்னைக்கு நாடே
பேசுற மாதிரி
நடத்திப்புட்டா அழகன் மக,
அறிவும், ஆண்டவனும்
சாதி பாக்குறதில்ல
தெறம
செட்டியாரா,
புள்ளமாரான்னு
சோதிச்சுப் பாத்து
உருவாக்குறதில்ல.
நாமதான் கெடந்து
நான் பெருசு,
நீ பெருசுன்னு
நாயா கொரைக்கிறோம்.
அம்பேத்காரு சட்டத்த
நம்ம அக்ரகாத்து
அய்யர் வக்கீலு
எடுத்துப் பேசுறதில்லயா?
எளையராசா அடிக்கிறதுக்கு
தேவரு சிவாஜி
ஆடிப்பாடி நடிக்கலயா?
அதனால,
சாதி பாத்து
யோசிச்சு நிக்காம,
நம்ம கிராமத்து சார்பா
அஞ்சு ரூபாய்க்கு
மாலை ஒன்ன
வாங்கிட்டுப் போயி,
அழகன் மகளுக்கு
அணிவிச்சு
பாராட்டுறதுதான்
பண்பா படுதப்பா
அப்புறம் ஒங்க இஷ்டம்
மூச்சு விடாம,
முத்தையாக் கோணாறு
சொல்லி முடிச்சபோது....
ஊரு சனத்துல பாதி
உடனே ஆமோதிச்சிருச்சு.
வாலிபப் பயலுக மத்தியிலும்
வலுவான ஆதரவுதான்.
ஆனா,
பெருசுகதான் கெடந்து
பொருமுதுக....
அழகன் மக
படிச்சதுக்கு
'வாத்தி' மார்க் போடட்டும்
அரசாங்கம்
வெத்தல - பாக்க
தட்டுல வச்சு
அவுக சாதிக்குன்னு
வேல கொடுக்கட்டும்
நாம எதுக்கு
மாலை போடணும்,
மரியாதை பண்ணனும்?
முத்தையா வேணுமின்னா
அவன் மகன விட்டு
மாலையப் போட்டு
அழகனுக்கு
சம்மந்தியாக் கூட
ஆயிட்டு போகட்டும்
இப்படி....
நாராசர நடையில
சிலதுக வெடிக்க,
ஒரே கசமுசாவாகி
ஒருவழியா ஊருசனம்
ஒரு முடிவுக்கு வந்துச்சு....
ஆயிரம் இருந்தாலும்
நம்ம ஊருக்கு
நல்ல பேரு வாங்கித் தந்த
அந்தப் புள்ளக்கி
'சேரிப்புள்ள'ன்னு பாக்காம
நாமெல்லாம் சேந்து போயி
நல்ல வார்த்தை
நாலச் சொல்லி
ஊரு சார்பா
ஒரு சில்வர் தூக்குச்சட்டி
வாங்கிக் கொடுப்போம்
'மேப்படிப்புக்கு
போற புள்ளக்கி
சோறு கொண்டு போக
ஏதுவா இருக்கும்னு' முடிவாகி
ஊரே தெரண்டு
சேரிக்குள்ள
மொதமொதலா
நுழைஞ்சுச்சு
அழகன் ஓடியாந்து,
'ஐயாமாருகல்லாம்
வாங்க.... வாங்க....'ன்னு
பழகிப்போன அடிமைக்
கும்பிடு போட,
அவன் மக சித்ரா
உள்ளேயிருந்து வந்து
ஊரைக் கையெடுத்துக்
கும்பிட்டுச்சு
'சுள்ளி பொறுக்குற
கூட்டத்துல பொறந்து
பள்ளிக்கொடத்துக்கும்
நம்ம கிராமத்துக்கும்
நல்ல பேரு
வாங்கியாந்திருக்க.
நல்லா இரு புள்ள'ன்னு
ஊரு அம்பலம்
தூக்குச்சட்டிய கொடுக்க,
ஊருச்சனம் கைகொட்டுச்சு.
கண்ணுலருந்து வடிஞ்ச
கண்ணீரோட
அழகன் மக சித்ரா
அழுதுக்கிட்டே சொல்லுச்சு
'எங்கள செருப்பு போட்டு
நடக்கப்புடாதுன்னு
சொன்னீக
அதனால,
எங்க பாதம் பலமாச்சு.
ஊரணியில தண்ணி
எடுக்கப்புடாதுன்னு
உத்தரவு போட்டீக
அதனால,
அரசாங்கம் அடி பைப்ப
எங்களுக்குன்னு தனியா
வீதிக்கு வீதி
போட்டுத் தந்துச்சு
கோயிலுக்குள்ள
நொழயப்புடாதுன்னு
தடுத்தீக
சர்ச் கட்டிக் கொடுத்து
'ஏசு சாமிய' எங்களோட
சேரிக்குள்ளயே
ஒக்கார வச்சுப்புட்டாங்க
இப்படி.....
எத்தனையோ நல்லதுக
ஒங்களாலதான் கெடச்சுச்சு
அதுமாதிரியே.....
உங்க புள்ளைகள
சேரிப்புள்ளகளோட சேர்த்து
ஒக்கார வச்சதுக்காக
வாத்தியார அடிச்சீக.
அன்னைலருந்து
அவரு என்னைய
அடிச்சி அடிச்சி
படிக்க வச்சாரு.
இன்னைக்கி நான்....
ஒசந்து நிக்கிறதுக்கும்
நீங்கதான் காரணம்.
என்ன ஒன்னு....
இந்தக் காலனியில
பொறக்காம
ரெண்டு வீதி தள்ளி,
ஒங்க சனத்துல
ஒருத்தியா பொறந்திருந்தா,
இப்பிடி
சம்பிரதாயத்துக்குன்னு
இல்லாம,
மனசார
வாழ்த்தியிருப்பீகன்னு
கண்ணீர் வழிய
அந்தச் சின்னப்புள்ள
விம்மி அழ,
ஊருச்சனத்துக்கு
நல்லா ஒரைச்சிருச்சு.
"சோரு தூக்கிப் போக
தூக்கு வாங்கித்
தந்ததுக்கு பதிலா
சுய மரியாதைய
சொமக்குற மாதிரி
எனக்கு ஒரு சோடி
செருப்பு வாங்கித்
தரப்புடாதா"ன்னு
கேட்டப்போ,
சாதி சாதின்னு
சதா மல்லுக்கு
நிக்கிற பயலுககூட
மக்கிப்போன
குப்பையாட்டம்
சரிஞ்சுட்டான்ங்க.
சாதிங்கிறது
கால் முளைச்ச
'சதிதானே' அப்பு.
அழகன் மக 'சித்ரா'
எங்களுக்கு
பொம்பளப் பெரியாரா
தெரியறா!
எழவு சொல்றது,
குழி வெட்டுறது,
பொணத்த
பொதைக்கிறது,
எரிக்கிறது,
செத்த மாட்ட
தோலை உரிச்சுட்டு
தோண்டி பொதைக்கிறது,
கூலி வாங்காம
குடியானவுக வீட்டுக்கு
ஊத்துற கூழுக்கு
உழைக்கிறது,
இப்படி....
மாடா ஒழைக்கிற
மனுசாக்கள
நாம் 'சேரி'ன்னு
ஒதுக்கி வச்சோம்.
'செருப்புப் போட்டு
நடக்கப்புடாது'ன்னு
தடை விதிச்சோம்....
'ஊரு குளத்துல
தண்ணி எடுக்கப்புடாது'ன்னு
தடுத்து வச்சோம்.
'சட்டை அணியக்கூடாது'
'இடுப்பு வேட்டிய
மொழங்காலுக்கு மேல
ஏத்தி கட்டப்படாது
கணுக்காலுக்குக் கீழ
எறக்கியும்
கட்டப்படாது'ன்னு
உடுத்தற துணிக்கும்
நாம அளவுசொல்லி
ஒடுக்கிவெச்சோம்
வெலங்குக்குக் கீழா
நடத்துனோம்
ஆனா....
தடுக்கப்படுகிற
அணையிலருந்துதான்
தண்ணி வெள்ளமா
பெருக்கெடுத்து
வேகமா பாயுங்கிற மாதிரி!
இன்னைக்கு என்னாச்சு....
முழுப் பரீட்சையில
நம்ம அழகன் மக 'சித்ரா'
மாநிலத்திலேயே
மொத மார்க் வாங்கி
முன்னாடி வந்திருக்காளாம்!
டி.வி.க்காரனும்,
ரேடியோக்காரனும்
மைக்கைத் தூக்கிக்கிட்டு
காலனிப் பக்கமா
அணிவகுத்துப் போறாங்க.
அடுத்த ஜில்லா அறியாத
நம்ம ஊரு பேரை
இன்னைக்கு நாடே
பேசுற மாதிரி
நடத்திப்புட்டா அழகன் மக,
அறிவும், ஆண்டவனும்
சாதி பாக்குறதில்ல
தெறம
செட்டியாரா,
புள்ளமாரான்னு
சோதிச்சுப் பாத்து
உருவாக்குறதில்ல.
நாமதான் கெடந்து
நான் பெருசு,
நீ பெருசுன்னு
நாயா கொரைக்கிறோம்.
அம்பேத்காரு சட்டத்த
நம்ம அக்ரகாத்து
அய்யர் வக்கீலு
எடுத்துப் பேசுறதில்லயா?
எளையராசா அடிக்கிறதுக்கு
தேவரு சிவாஜி
ஆடிப்பாடி நடிக்கலயா?
அதனால,
சாதி பாத்து
யோசிச்சு நிக்காம,
நம்ம கிராமத்து சார்பா
அஞ்சு ரூபாய்க்கு
மாலை ஒன்ன
வாங்கிட்டுப் போயி,
அழகன் மகளுக்கு
அணிவிச்சு
பாராட்டுறதுதான்
பண்பா படுதப்பா
அப்புறம் ஒங்க இஷ்டம்
மூச்சு விடாம,
முத்தையாக் கோணாறு
சொல்லி முடிச்சபோது....
ஊரு சனத்துல பாதி
உடனே ஆமோதிச்சிருச்சு.
வாலிபப் பயலுக மத்தியிலும்
வலுவான ஆதரவுதான்.
ஆனா,
பெருசுகதான் கெடந்து
பொருமுதுக....
அழகன் மக
படிச்சதுக்கு
'வாத்தி' மார்க் போடட்டும்
அரசாங்கம்
வெத்தல - பாக்க
தட்டுல வச்சு
அவுக சாதிக்குன்னு
வேல கொடுக்கட்டும்
நாம எதுக்கு
மாலை போடணும்,
மரியாதை பண்ணனும்?
முத்தையா வேணுமின்னா
அவன் மகன விட்டு
மாலையப் போட்டு
அழகனுக்கு
சம்மந்தியாக் கூட
ஆயிட்டு போகட்டும்
இப்படி....
நாராசர நடையில
சிலதுக வெடிக்க,
ஒரே கசமுசாவாகி
ஒருவழியா ஊருசனம்
ஒரு முடிவுக்கு வந்துச்சு....
ஆயிரம் இருந்தாலும்
நம்ம ஊருக்கு
நல்ல பேரு வாங்கித் தந்த
அந்தப் புள்ளக்கி
'சேரிப்புள்ள'ன்னு பாக்காம
நாமெல்லாம் சேந்து போயி
நல்ல வார்த்தை
நாலச் சொல்லி
ஊரு சார்பா
ஒரு சில்வர் தூக்குச்சட்டி
வாங்கிக் கொடுப்போம்
'மேப்படிப்புக்கு
போற புள்ளக்கி
சோறு கொண்டு போக
ஏதுவா இருக்கும்னு' முடிவாகி
ஊரே தெரண்டு
சேரிக்குள்ள
மொதமொதலா
நுழைஞ்சுச்சு
அழகன் ஓடியாந்து,
'ஐயாமாருகல்லாம்
வாங்க.... வாங்க....'ன்னு
பழகிப்போன அடிமைக்
கும்பிடு போட,
அவன் மக சித்ரா
உள்ளேயிருந்து வந்து
ஊரைக் கையெடுத்துக்
கும்பிட்டுச்சு
'சுள்ளி பொறுக்குற
கூட்டத்துல பொறந்து
பள்ளிக்கொடத்துக்கும்
நம்ம கிராமத்துக்கும்
நல்ல பேரு
வாங்கியாந்திருக்க.
நல்லா இரு புள்ள'ன்னு
ஊரு அம்பலம்
தூக்குச்சட்டிய கொடுக்க,
ஊருச்சனம் கைகொட்டுச்சு.
கண்ணுலருந்து வடிஞ்ச
கண்ணீரோட
அழகன் மக சித்ரா
அழுதுக்கிட்டே சொல்லுச்சு
'எங்கள செருப்பு போட்டு
நடக்கப்புடாதுன்னு
சொன்னீக
அதனால,
எங்க பாதம் பலமாச்சு.
ஊரணியில தண்ணி
எடுக்கப்புடாதுன்னு
உத்தரவு போட்டீக
அதனால,
அரசாங்கம் அடி பைப்ப
எங்களுக்குன்னு தனியா
வீதிக்கு வீதி
போட்டுத் தந்துச்சு
கோயிலுக்குள்ள
நொழயப்புடாதுன்னு
தடுத்தீக
சர்ச் கட்டிக் கொடுத்து
'ஏசு சாமிய' எங்களோட
சேரிக்குள்ளயே
ஒக்கார வச்சுப்புட்டாங்க
இப்படி.....
எத்தனையோ நல்லதுக
ஒங்களாலதான் கெடச்சுச்சு
அதுமாதிரியே.....
உங்க புள்ளைகள
சேரிப்புள்ளகளோட சேர்த்து
ஒக்கார வச்சதுக்காக
வாத்தியார அடிச்சீக.
அன்னைலருந்து
அவரு என்னைய
அடிச்சி அடிச்சி
படிக்க வச்சாரு.
இன்னைக்கி நான்....
ஒசந்து நிக்கிறதுக்கும்
நீங்கதான் காரணம்.
என்ன ஒன்னு....
இந்தக் காலனியில
பொறக்காம
ரெண்டு வீதி தள்ளி,
ஒங்க சனத்துல
ஒருத்தியா பொறந்திருந்தா,
இப்பிடி
சம்பிரதாயத்துக்குன்னு
இல்லாம,
மனசார
வாழ்த்தியிருப்பீகன்னு
கண்ணீர் வழிய
அந்தச் சின்னப்புள்ள
விம்மி அழ,
ஊருச்சனத்துக்கு
நல்லா ஒரைச்சிருச்சு.
"சோரு தூக்கிப் போக
தூக்கு வாங்கித்
தந்ததுக்கு பதிலா
சுய மரியாதைய
சொமக்குற மாதிரி
எனக்கு ஒரு சோடி
செருப்பு வாங்கித்
தரப்புடாதா"ன்னு
கேட்டப்போ,
சாதி சாதின்னு
சதா மல்லுக்கு
நிக்கிற பயலுககூட
மக்கிப்போன
குப்பையாட்டம்
சரிஞ்சுட்டான்ங்க.
சாதிங்கிறது
கால் முளைச்ச
'சதிதானே' அப்பு.
அழகன் மக 'சித்ரா'
எங்களுக்கு
பொம்பளப் பெரியாரா
தெரியறா!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home