Tuesday, 5 March 2013

தேர்வா? நோ பிராப்ளம்!- Exams - No problem!

Exams - No problem! - Child Care Tips and Informations in Tamil

படிப்பு என்றாலே பலருக்கு கசக்கும்! தன் பாடங்களை விரும்பி படிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்? பிடித்தாலும், பிடிக்காமல் போனாலும் படிப்பு மிகவும் முக்கியமானது. வளமான எதிர்காலத்திற்கு வழி வகுப்பது படிப்பு என்பது யாராலும் மறுக்க முடியாது.

தேர்வு வந்தாலே எல்லோருக்கும் பயம் தான். அதிக நேரம் படிக்காமல் சிலர் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதை பார்க்கும் போது எரிச்சல் வரத்தான் செய்யும். எவ்வளவு நேரம் படிப்பில் செலவு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை. அந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது முக்கியம்.

புத்தகத்தை கையிலும் மனதை வேறு இடத்திலும் வைத்துக் கொண்டு படிப்பதால் நேரம் வீணாவது தான் மிச்சம். அது மட்டுமில்லை நண்பர்களோடு சுற்றும் நேரம், டி.வி பார்க்கும் நேரம் ஆகியவற்றை மறந்து விட வேண்டியது தான்! படிப்பில் முன்னேற இதோ சில வழிகள்!

வீட்டுப் பாடங்கள்:-

வீட்டில் செய்ய ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை தவறாமல் செய்வதால் தினமும் சொல்லித் தரும் பாடங்கள் மனதில் பதியும்.

ஈ அடிச்சான் காப்பி:-

சிலர் காப்பி அடிப்பதே வாழ்வின் லட்சியமாக கொண்டுள்ளனர். வீட்டு பாடமோ, தேர்வோ அடுத்த மாணவியை நம்பியே வாழ்கின்றனர். இது தற்காலிகமாக உதவினாலும் ஒரு நாள் பிரச்சனையை தான் தரும்.

வகுப்பில் கவனம்:-

ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனம் செலுத்துவதால் வீட்டில் படிக்கும் நேரத்தை பாதியாக குறைக்கலாம

குறிப்பு எடுப்பது:-

ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வீட்டில் படிக்கும் போதும் முக்கியமான குறிப்புக்களை எழுதிவைப்பது நல்லது. தேர்வு நேரத்தில் அவசரமாக படிக்க உதவும்.

சந்தேகங்களை தீர்ப்பது:-

ஆசிரியர் சொல்லும் போது புரிந்தது. வீட்டிற்கு வந்தால் மறந்து விட்டது. என்ன செய்வது? அடுத்த நாள் மறக்காமல் ஆசிரியரிடம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும்.

தினமும் படிப்பது:-

தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். தேர்வு காலத்தில் எல்லாவற்றையும் படிக்க முயற்சித்தால் அதிகநேரம் செலவாகும். அத்தோடு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் படித்தால் அது நினைவில் தங்குவதும் கடினம்.

படிக்கும் போது படிப்பு:-


கவனம் செலுத்தி ஒரு மணி நேரம் படிப்பது, கவனம் செலுத்தாமல் நான்கு மணி நேரம் படிப்பதற்கு சமம். அவ்வளவு நேரம் செலவளித்தும் மனதில் பதியும் என்ற உறுதியும் இல்லை. அதனால் படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home