Thursday, 24 January 2013

'குழந்தைகள் தின ஸ்பெஷல்' - பிரட் அல்வா!!!

Delicious Bread Halwa
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல சுவையான வகையில் வித்தியாசமான ஒரு இனிப்பு செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது வீட்டில் பிரட் இருந்தால், அந்த பிரட்டை வைத்து ஒரு அல்வா செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். இப்போது அந்த பிரட் அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 
மில்க் பிரட் - 8 துண்டுகள் 
பாதாம் - 12 
முந்திரி - 12 
ஏலக்காய் - 6 
நெய் - 1 கப் 
பால் - 1/2 லிட்டர் 
சர்க்கரை - 1 கப்

செய்முறை: 
முதலில் பிரட் துண்டுகளை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். 
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி, அவற்றை நெய்யில் இருந்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். 
பிறகு உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். 
பின் அவற்றை இறக்கி விடவும். 
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். 
பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். 
சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். 
அதற்குள் பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். 
இப்போது அந்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை அந்த பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 5-6 நிமிடம் வேக வைக்கவும். இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். 
பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால் அலங்கரிக்க வேண்டும். 
இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!! 
இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ சாப்பிடலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home