பலாப்பழம் நெக்டார் ஜூஸ

தேவையான பொருட்கள்
பலாப்பழம் _ 15 சுளை,
வெல்லம் _ 100 கிராம்,
தேன்_2 டேபிள் ஸ்பூன்,
3 டம்ளர் தண்ணீர்.
செய்முறை
பலாச்சுளைகளை இட்லி குக்கரில்வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஆறவைத்து பலாப்பழத்துடன் தேனையும் வெல்லத்தையும் கலந்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
சிலர் இதில் பால் கலக்கலாமா என்று கேட்பதுண்டு. இதில் பால் கலக்கத் தேவையில்லை.
அப்படிக் கலந்தால் சாப்பிடுவது அப்படி நெஞ்சிலேயே நிற்பது மட்டும் அல்லாமல் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும்.
எனவே இதற்கு தேன் கலப்பதுதான் பெஸ்ட். ஃபிரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை.
பாட்டிலில் வைத்துக் கொண்டால் போதும். மேக்ஸிமம் காலை நேரங்களில் பருகுவதுதான் பெஸ்ட்.
டயட்
மஞ்சள் நிறப் பழமா இருக்கிறதால ஃபைட்டோ நிறைந்த ஏ விட்டமின் ஜாஸ்தியிருக்கும். விட்டமின் மற்றும் மினரல்ஸ் நிரம்பியது.
தேன் மலச்சிக்கல் தீர்க்கும் குணம் வாய்ந்தது. வாழைப்பழமும் சத்து நிறைந்தது.
ஆனால் மூன்றுமே இனிப்பு ஜாஸ்தியாக இருப்பதால் டயாபடீஸ்காரர்கள் அறவே தவிர்ப்பது நல்லது.
Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home