பேபிகார்ன் ஃபிரை
தேவையான பொருள்கள்:
- பேபிகார்ன் = 250 கிராம்
- கடலை மாவு = 75 கிராம்
- மைதா மாவு = 75 கிராம்
- இஞ்சி = சிறிதளவு
- பூண்டு = சிறிதளவு
- வெங்காயம் = 1
- தக்காளி = 3
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
- கொத்தமல்லி இலை = சிறிதளவு
- பேபிகார்னை நன்கு சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். பிறகு அதில் கடலை மாவு, மைதா மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- தக்காளியை நன்கு பிசைந்து கூழாக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி கூழ் சேர்த்து கிளறி பொரித்த பேபிகார்னை போட்டு தேவையான அளவு உப்பு கலந்து வதக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
மருத்துவ குணங்கள்:
- பேபிகார்னில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் 80 கலோரிகள் காணப்படுகிறது. மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் B6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது.
- கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ளது.
- இதில் காணப்படும் ஃபைபரினால் மலச்சிக்கல் மற்றும் குடல் புற்று நோயை தடுக்கலாம். இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றும். இதய நோய், புற்று நோய் மற்றும் கண் புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.
Labels: சைவம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home