பஞ்ச்)சாயத்து! - மருது அழகுராஜ்
ஊர்தோறும்
அன்னச் சத்திரம்,
தண்ணீர்ப் பந்தல்
வீதி தோறும்
சுமைதாங்கிகள்,
ஊருக்குள்
விழும் மழை நீரை
குடிநீராய் சேமிக்கும்
ஊருணிகள்
ஊருணிக்குள்
செல்லும்
தண்ணீரை
தெளிய வைத்து
உள்ளுக்குள் அனுப்பும்
மதகுப் பள்ளம்
தெய்வ சாட்சியாய்
மந்தையம்மன்
பார்வை படும்படி
அமைக்கப்படும்
ஊர்ப் பஞ்சாயத்து மேடை
அதில்....
வாய்தாக்கள் இன்றி
வழங்கப்படும்
ஒத்தி வைக்கப்படாத
உடனடி தீர்ப்புகள்
எழுதப் படிக்கத்
தெரியாதவனுக்கும்
தகவல்களை
தண்டோராவால்
தெரிவிக்கும்
தகவல் தொடர்பு
காப்புக் கட்டி
கன்னியமாய்
கொண்டாடப்படும்
திருவிழாக்கள்
பொழுதுபோக்கோடு
மனித வர்க்கத்தை
பழுது பார்க்கத் தூண்டும்
அரிச்சந்திரா நாடகங்கள்
'சாவு வீட்டில்
அலங்காரம் கூடாது' என
சட்டை போடாத
சாமானியக் கலாச்சாரம்....
இன்ப துன்பங்களில்
பங்கு பெறும்
பங்காளிகளை
வரிசையில் நிறுத்தி
துக்கம் கேட்க வரும்
நட்பும், உறவும்
'நாங்கள் இருக்கிறோம்
கவலைய விடு' என
தோள் கொடுக்கும்
கை கொடுத்தல்.....
'அழும்போது
இதயத்திற்கு அழுத்தம்
நேர்ந்திடக் கூடாது'
என்று
ஒத்தி எடுக்கும்
மருத்துவ முயற்சியான
மார் அடித்தல்.....
மனதினுள் சோகத்தை
அடக்கி அடக்கி
இதயத்திற்கு
இடர் ஏதும் கூடாது என்று
முராரியில் நினைவுகளை
மூழ்த்தி இறக்கி
வைக்கும் ஒப்பாரி
"காலமானவரின்
கதாபாத்திரத்தை
இனி நீ சேர்த்தே
செய்திடல் வேண்டும்"
என்று உறவுகள் கூடி
உத்தரவிடும் உருமாக்கட்டு
என்னும்
உருக்கமான கட்டளை.....
வருந்தி வருந்தி
நினைத்து நினைத்து
நெஞ்சுருகி
உடல் ஏற்றிக் கொண்ட
சூட்டை
இறக்கி வைக்கும்
எட்டாம் நாளில்
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கும்
கருமாதிச் சடங்கு.....
இப்படி,
வாழ்ந்து போறவனின்
வழியனுப்பு நிகழ்ச்சியிலும்,
வாழப்போறவனுக்கு
வழிசொல்லும்
ஒப்பில்லாத் தமிழனின்
உயரிய கலாச்சாரம்....
ஆனால்,
பரவிக் கெடந்த
பண்பாடும்,
பழக்கவழக்கங்களும்
மொத்தமா அழிஞ்சு
போகுதே!
போலீசு ஊருக்குள்ள
நொழஞ்சாலே
தீட்டுன்னு கருதுன
காலம் போயி,
தடுக்கி விழுந்தாலே
போலீஸ் ஸ்டேஷன்
வாசல்ல போய்
நிக்கிறானுங்க
முன்சாமீன்
பெயிலு,
இப்படி ஏதேதோ
வக்கீல் பாஷையில
பேசுறானுக
மனுச மக்களிடையே
பிணக்கு வர்றதும்
அத ஊரு கூடி
தீர்த்து வக்கிறதும்
கிராமத்தோட
தட்டுப்பாடான பஞ்சாயத்து!
அதையும்,
'கட்டப் பஞ்சாயத்து'ன்னு
சொல்லி
அரசாங்கம் தடை
செஞ்சு புடுச்சு....
'நீதி நெறிக்கு
பொறம்பா நடந்தா
ஊர விட்டு
தள்ளி வப்போம்
தனிமைப் படுத்தும்போது
ஒருத்தன் தன்
குற்றத்தை உணர
வாய்ப்பு வருமில்ல
அப்படி,
உணர்ந்து
ஊருகிட்ட வந்து
வருந்தினாலே
மீண்டும் ஊரோடு
சேத்துப்போம்
தண்டனைங்கிறது
திருத்துறதுக்குத்தானே!
ஆனா,
இப்பல்லாம்
குத்தம் பண்ணுனவன
கோர்ட்டு தண்டிக்குது
அதுக்குள்ள....
'விடுதலை வாங்கித்
தாரேன்'னு
சொல்லிச் சொல்லியே.....
இருக்கிற சொத்தையும்
கருப்பு கோட்டு போட்டவரு
கறந்துபுடுவாரு!
கடைசியில
தப்பு செஞ்சவன்
செயில்ல கெடப்பான்
மிச்சம் உள்ள குடும்பம்
கடன்கப்பியில தத்தளிக்கும்!
அதனால,
அரசாங்கம் ரோடு
போடட்டும்
வீதிக்கு வெளக்கு
போடட்டும்
ரேசன் கடையில
அரிசி தரட்டும்
கண்மாய்க்கு மடை
கட்டட்டும்
விவசாயத்துக்கு
உரம் தட்டும்
ஆனா.....
நீதி நேர்மைய
பரிபாலனம் பண்ற
கிராமங்களோட
சுயநிர்ணய உரிமைய
பறிக்காம எங்களுக்கு
சொதந்திரம் தரட்டும்!
'எங்களை விட்டுருங்கப்பு'
கட்டுப்பாடுகளை
நாங்க
கட்டிக் காத்துக்கிறோம்
வவுத்துக்கு வழி
சொல்லுங்க
வாழ்ற வழிய
நாங்களே
வகுத்துக்கிறோம்
ஒவ்வொரு கிராமத்துப்
பெருசுகளோட
மனசாட்சிகளின்
பொருமல்தான் இது.....
அன்னச் சத்திரம்,
தண்ணீர்ப் பந்தல்
வீதி தோறும்
சுமைதாங்கிகள்,
ஊருக்குள்
விழும் மழை நீரை
குடிநீராய் சேமிக்கும்
ஊருணிகள்
ஊருணிக்குள்
செல்லும்
தண்ணீரை
தெளிய வைத்து
உள்ளுக்குள் அனுப்பும்
மதகுப் பள்ளம்
தெய்வ சாட்சியாய்
மந்தையம்மன்
பார்வை படும்படி
அமைக்கப்படும்
ஊர்ப் பஞ்சாயத்து மேடை
அதில்....
வாய்தாக்கள் இன்றி
வழங்கப்படும்
ஒத்தி வைக்கப்படாத
உடனடி தீர்ப்புகள்
எழுதப் படிக்கத்
தெரியாதவனுக்கும்
தகவல்களை
தண்டோராவால்
தெரிவிக்கும்
தகவல் தொடர்பு
காப்புக் கட்டி
கன்னியமாய்
கொண்டாடப்படும்
திருவிழாக்கள்
பொழுதுபோக்கோடு
மனித வர்க்கத்தை
பழுது பார்க்கத் தூண்டும்
அரிச்சந்திரா நாடகங்கள்
'சாவு வீட்டில்
அலங்காரம் கூடாது' என
சட்டை போடாத
சாமானியக் கலாச்சாரம்....
இன்ப துன்பங்களில்
பங்கு பெறும்
பங்காளிகளை
வரிசையில் நிறுத்தி
துக்கம் கேட்க வரும்
நட்பும், உறவும்
'நாங்கள் இருக்கிறோம்
கவலைய விடு' என
தோள் கொடுக்கும்
கை கொடுத்தல்.....
'அழும்போது
இதயத்திற்கு அழுத்தம்
நேர்ந்திடக் கூடாது'
என்று
ஒத்தி எடுக்கும்
மருத்துவ முயற்சியான
மார் அடித்தல்.....
மனதினுள் சோகத்தை
அடக்கி அடக்கி
இதயத்திற்கு
இடர் ஏதும் கூடாது என்று
முராரியில் நினைவுகளை
மூழ்த்தி இறக்கி
வைக்கும் ஒப்பாரி
"காலமானவரின்
கதாபாத்திரத்தை
இனி நீ சேர்த்தே
செய்திடல் வேண்டும்"
என்று உறவுகள் கூடி
உத்தரவிடும் உருமாக்கட்டு
என்னும்
உருக்கமான கட்டளை.....
வருந்தி வருந்தி
நினைத்து நினைத்து
நெஞ்சுருகி
உடல் ஏற்றிக் கொண்ட
சூட்டை
இறக்கி வைக்கும்
எட்டாம் நாளில்
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கும்
கருமாதிச் சடங்கு.....
இப்படி,
வாழ்ந்து போறவனின்
வழியனுப்பு நிகழ்ச்சியிலும்,
வாழப்போறவனுக்கு
வழிசொல்லும்
ஒப்பில்லாத் தமிழனின்
உயரிய கலாச்சாரம்....
ஆனால்,
பரவிக் கெடந்த
பண்பாடும்,
பழக்கவழக்கங்களும்
மொத்தமா அழிஞ்சு
போகுதே!
போலீசு ஊருக்குள்ள
நொழஞ்சாலே
தீட்டுன்னு கருதுன
காலம் போயி,
தடுக்கி விழுந்தாலே
போலீஸ் ஸ்டேஷன்
வாசல்ல போய்
நிக்கிறானுங்க
முன்சாமீன்
பெயிலு,
இப்படி ஏதேதோ
வக்கீல் பாஷையில
பேசுறானுக
மனுச மக்களிடையே
பிணக்கு வர்றதும்
அத ஊரு கூடி
தீர்த்து வக்கிறதும்
கிராமத்தோட
தட்டுப்பாடான பஞ்சாயத்து!
அதையும்,
'கட்டப் பஞ்சாயத்து'ன்னு
சொல்லி
அரசாங்கம் தடை
செஞ்சு புடுச்சு....
'நீதி நெறிக்கு
பொறம்பா நடந்தா
ஊர விட்டு
தள்ளி வப்போம்
தனிமைப் படுத்தும்போது
ஒருத்தன் தன்
குற்றத்தை உணர
வாய்ப்பு வருமில்ல
அப்படி,
உணர்ந்து
ஊருகிட்ட வந்து
வருந்தினாலே
மீண்டும் ஊரோடு
சேத்துப்போம்
தண்டனைங்கிறது
திருத்துறதுக்குத்தானே!
ஆனா,
இப்பல்லாம்
குத்தம் பண்ணுனவன
கோர்ட்டு தண்டிக்குது
அதுக்குள்ள....
'விடுதலை வாங்கித்
தாரேன்'னு
சொல்லிச் சொல்லியே.....
இருக்கிற சொத்தையும்
கருப்பு கோட்டு போட்டவரு
கறந்துபுடுவாரு!
கடைசியில
தப்பு செஞ்சவன்
செயில்ல கெடப்பான்
மிச்சம் உள்ள குடும்பம்
கடன்கப்பியில தத்தளிக்கும்!
அதனால,
அரசாங்கம் ரோடு
போடட்டும்
வீதிக்கு வெளக்கு
போடட்டும்
ரேசன் கடையில
அரிசி தரட்டும்
கண்மாய்க்கு மடை
கட்டட்டும்
விவசாயத்துக்கு
உரம் தட்டும்
ஆனா.....
நீதி நேர்மைய
பரிபாலனம் பண்ற
கிராமங்களோட
சுயநிர்ணய உரிமைய
பறிக்காம எங்களுக்கு
சொதந்திரம் தரட்டும்!
'எங்களை விட்டுருங்கப்பு'
கட்டுப்பாடுகளை
நாங்க
கட்டிக் காத்துக்கிறோம்
வவுத்துக்கு வழி
சொல்லுங்க
வாழ்ற வழிய
நாங்களே
வகுத்துக்கிறோம்
ஒவ்வொரு கிராமத்துப்
பெருசுகளோட
மனசாட்சிகளின்
பொருமல்தான் இது.....
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home