பாவம் ராசேந்தரு!- மருது அழகுராஜ்
வீரபத்ர சாமி
தீப்பந்தத்தை
ரெண்டு கையிலயும்
புடிச்சுக்கிட்டு
நெஞ்சோடு அணைச்சு
ஆடும்போது
பாக்கவே பயமாயிருக்கும்
செகப்பட்டி
சேவுகஞ்செட்டியாரு
நேர்த்திக்கடனா
சாமியாடிக்கு
செஞ்சு போட்ட
தங்க வளையம்
காதுல மின்னும்
பட்டுத் துணியில
மொழங்கால் அளவுக்கு
தைக்கப்பட்ட
கால் சட்டை
பெருக்கல்
குறி மாதிரி
நெஞ்சுல
குறுக்கும் மறுக்குமா
கட்டியிருக்கும்
சலங்கை
சல்சல்லுன்னு
சவுண்டு கௌப்பும்
வீரபத்ர சாமிக்கு
பேருக்கேத்த மாதிரி
முறுக்கிக்கிட்டு
நிக்கும் மீசை
பொம்பளக
கூடி இடும்
குலவச்சத்தம்
பூசாரிப்பட்டிக்காரங்க
கௌப்புற
பறையோசை,
இப்படி.....
வைகாசி வந்தாவே
எங்க ஊரு
திருவிழா களகட்டும்!
பலூனு,
ஊதாங்குழலு,
இதயக்கனியில
எம்.ஜி.ஆரு போடுற
கண்ணாடி கணக்கா
விதவிதமா
கலர் கலரா
கூலிங்கிளாசுக
உருவாக்குன
நாள்லருந்து
ஒடஞ்சு
போறதுவரைக்கும்
ஒரே டயத்தைக்
காட்டும் கலர்கலரா
கைக்கடிகாரங்க
வளையல்,
பாசி பவளக்கடைகள்,
இளநீரு, நொங்கு,
சர்பத்து, விக்கிறவுக....
இப்படி....
ஒரே ஒரு
பெட்டிக் கடை
உள்ள எங்க ஊரு,
அன்னைக்கி மட்டும்
பட்டணத்து
பசாரு கணக்கா
இருக்கும்!
தேரோட்டம்
முடிஞ்சதும்
வீட்டுக்கு வீடு
ஆடு வெட்டி
விருந்து நடக்கும்
எல்லா சொந்தக்காரங்களும்
திருவிழாவுக்கு
தவறாம
வந்து போவாக
பெருசுகளெல்லாம்
பசி மருந்து சாப்புட்ட
பின்னாடிதான்
பந்தியில ஒக்காருவாக
(ஓ.... அதுவா?)
பந்தி முடிஞ்சவுடனே
பள்ளிக்கூடத்துக்குப்
பின்னாடி
ஏட்டுக்காசு
சீட்டாட்டம்
நடக்குற எடத்துக்கு
ஆம்பிளைக போவாக
போலீசுமாமா மட்டும்
விளையாடாமலே
செயிக்காமலே
காசு வாங்கிப் போவாக!
மணி அண்ணன்,
ராமு சித்தப்பா
எல்லோரும் எனக்கு
திருவிழா காசு
கொடுப்பாக
ஒரு வருஷத்துக்கு
வேண்டிய விளையாட்டுச்
சாமானையெல்லாம்
வாங்கி சேத்துப்பேன்
ஆனா....
போன வருஷம்
திருவிழாவோட
எல்லா சந்தோசமும்
போயிருச்சு
நான் ஆசை ஆசையா
வளத்த ராசேந்தர
போன வருஷம்
விருந்துக்கு
பொலி போட்டுட்டாக!
எல, தழ
அறுத்துப் போட்டு
கால, மாலையில
தண்ணி வச்சு
நானே வளத்தேன்
பள்ளிக்கூடம் போற
நேரத்தத் தவிர
பாக்கி நேரம்
அதுகூடத்தான்....
அதுக்குத் தாடி
அழகா இருக்கும்
அதனால அத
ராசேந்தருன்னு
பேரு சொல்லி
கூப்பிடுவேன்!
ஆடா நெனக்காம
ஆளாவே நெனைச்சு
பழகுவேன்!
வெளச்சல் இல்ல
காசு, பணம்
நடமாட்டம் கம்மின்னு
வெளியில இருந்து
ஆடு வாங்கி
காச கறியாக்க
வேணாமுன்னு
எங்கப்பா
ஒத்தக் கால்ல
நின்னதால....
ராசேந்தர வெட்டி
கறியாக்கி
வறுவல், ரசமுன்னு
சொந்த, பந்தங்க
எல்லாம் கூடி
தின்னுட்டு
ஏப்பம் விட்டுட்டுப்
போயிட்டாக
அன்னைலருந்து
எங்க ஊரு
திருவிழான்னாலே
எனக்கு புடிக்காது
கறி, கோழிய
விட்டுட்டு
காய்கறிக்கு மாறிட்டேன்
வளத்த கெடா
மாருல பாயும்பாங்க
ஆனா....
எங்க வீட்ட
பொறுத்தவரைக்கும்
வளத்த கெடா
எங்க சொந்தக்காரங்க
வயித்துக்குள்ள
பாஞ்சிருச்சே!
பாவம் ராசேந்தரு!
தீப்பந்தத்தை
ரெண்டு கையிலயும்
புடிச்சுக்கிட்டு
நெஞ்சோடு அணைச்சு
ஆடும்போது
பாக்கவே பயமாயிருக்கும்
செகப்பட்டி
சேவுகஞ்செட்டியாரு
நேர்த்திக்கடனா
சாமியாடிக்கு
செஞ்சு போட்ட
தங்க வளையம்
காதுல மின்னும்
பட்டுத் துணியில
மொழங்கால் அளவுக்கு
தைக்கப்பட்ட
கால் சட்டை
பெருக்கல்
குறி மாதிரி
நெஞ்சுல
குறுக்கும் மறுக்குமா
கட்டியிருக்கும்
சலங்கை
சல்சல்லுன்னு
சவுண்டு கௌப்பும்
வீரபத்ர சாமிக்கு
பேருக்கேத்த மாதிரி
முறுக்கிக்கிட்டு
நிக்கும் மீசை
பொம்பளக
கூடி இடும்
குலவச்சத்தம்
பூசாரிப்பட்டிக்காரங்க
கௌப்புற
பறையோசை,
இப்படி.....
வைகாசி வந்தாவே
எங்க ஊரு
திருவிழா களகட்டும்!
பலூனு,
ஊதாங்குழலு,
இதயக்கனியில
எம்.ஜி.ஆரு போடுற
கண்ணாடி கணக்கா
விதவிதமா
கலர் கலரா
கூலிங்கிளாசுக
உருவாக்குன
நாள்லருந்து
ஒடஞ்சு
போறதுவரைக்கும்
ஒரே டயத்தைக்
காட்டும் கலர்கலரா
கைக்கடிகாரங்க
வளையல்,
பாசி பவளக்கடைகள்,
இளநீரு, நொங்கு,
சர்பத்து, விக்கிறவுக....
இப்படி....
ஒரே ஒரு
பெட்டிக் கடை
உள்ள எங்க ஊரு,
அன்னைக்கி மட்டும்
பட்டணத்து
பசாரு கணக்கா
இருக்கும்!
தேரோட்டம்
முடிஞ்சதும்
வீட்டுக்கு வீடு
ஆடு வெட்டி
விருந்து நடக்கும்
எல்லா சொந்தக்காரங்களும்
திருவிழாவுக்கு
தவறாம
வந்து போவாக
பெருசுகளெல்லாம்
பசி மருந்து சாப்புட்ட
பின்னாடிதான்
பந்தியில ஒக்காருவாக
(ஓ.... அதுவா?)
பந்தி முடிஞ்சவுடனே
பள்ளிக்கூடத்துக்குப்
பின்னாடி
ஏட்டுக்காசு
சீட்டாட்டம்
நடக்குற எடத்துக்கு
ஆம்பிளைக போவாக
போலீசுமாமா மட்டும்
விளையாடாமலே
செயிக்காமலே
காசு வாங்கிப் போவாக!
மணி அண்ணன்,
ராமு சித்தப்பா
எல்லோரும் எனக்கு
திருவிழா காசு
கொடுப்பாக
ஒரு வருஷத்துக்கு
வேண்டிய விளையாட்டுச்
சாமானையெல்லாம்
வாங்கி சேத்துப்பேன்
ஆனா....
போன வருஷம்
திருவிழாவோட
எல்லா சந்தோசமும்
போயிருச்சு
நான் ஆசை ஆசையா
வளத்த ராசேந்தர
போன வருஷம்
விருந்துக்கு
பொலி போட்டுட்டாக!
எல, தழ
அறுத்துப் போட்டு
கால, மாலையில
தண்ணி வச்சு
நானே வளத்தேன்
பள்ளிக்கூடம் போற
நேரத்தத் தவிர
பாக்கி நேரம்
அதுகூடத்தான்....
அதுக்குத் தாடி
அழகா இருக்கும்
அதனால அத
ராசேந்தருன்னு
பேரு சொல்லி
கூப்பிடுவேன்!
ஆடா நெனக்காம
ஆளாவே நெனைச்சு
பழகுவேன்!
வெளச்சல் இல்ல
காசு, பணம்
நடமாட்டம் கம்மின்னு
வெளியில இருந்து
ஆடு வாங்கி
காச கறியாக்க
வேணாமுன்னு
எங்கப்பா
ஒத்தக் கால்ல
நின்னதால....
ராசேந்தர வெட்டி
கறியாக்கி
வறுவல், ரசமுன்னு
சொந்த, பந்தங்க
எல்லாம் கூடி
தின்னுட்டு
ஏப்பம் விட்டுட்டுப்
போயிட்டாக
அன்னைலருந்து
எங்க ஊரு
திருவிழான்னாலே
எனக்கு புடிக்காது
கறி, கோழிய
விட்டுட்டு
காய்கறிக்கு மாறிட்டேன்
வளத்த கெடா
மாருல பாயும்பாங்க
ஆனா....
எங்க வீட்ட
பொறுத்தவரைக்கும்
வளத்த கெடா
எங்க சொந்தக்காரங்க
வயித்துக்குள்ள
பாஞ்சிருச்சே!
பாவம் ராசேந்தரு!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home